Header Ads



முடிந்தால் பாராளுமன்றத்தை, கலைக்குமாறு ரணிலுக்கு சவால்

முடிந்தால் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான யோசனை ஒன்றை முன் வைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சவால் விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து அதில் வெற்றியும் ​பெறப்பட்டுள்ளது. மக்களை மதிக்கும் பிரதமர் எனில் நாளையே பாராளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனையொன்றை முன்வைக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான காலம் இப்போது சரியென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பாராளுமன்ற கலைப்புத் தொடர்பான யோசனைக்கு தாம் கையுயர்த்த தயாராகவிருப்பதாகவும் மக்களின் அபிலாஷைகளை அழிக்க 117 பேருக்கு இடமளிக்கப்படாது எனவும் எனவே நாளையே இந்த யோசனையை முன்வைக்குமாறு நாம் சவால் விடுக்கின்றோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Ok Raththarang, we peoples are challenging with you, Will you permanently resign from the politics? if Ranil Proposed to Dissolve Parliament.

    ReplyDelete
  2. Dear Mr. Abey gong please think country and people first. U R dam selfish politician.

    ReplyDelete

Powered by Blogger.