Header Ads



மகிந்த பிரதமராகியதால் பல, பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார் - எஸ்.பி.

இந்த குப்பைகளை பொறுப்பேற்காமல் இருந்திருந்தால், மஹிந்த ராஜபக்ஷவுக்கு தானாகவே இன்னும் இரண்டொரு மாதங்களில்  நாட்டை ஆட்சி செய்வதற்கான அதிகாரம் கிடைத்திருக்குமென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும்  போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதால் தற்போது மஹிந்த பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அதிகாரம் தானாகவே கிடைக்குமென்று தெரிந்திருந்தும் மஹிந்த ராஜபக்‌ஷ நாட்டைப் பாதுகாக்கும் அக்கறையுடன்  பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளங்களைப் பாதுகாக்கவும், பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் நாட்டில் சமஷ்டி ஆட்சி உருவாக்கத்தை தடுப்பதற்கும்  வடக்கு கிழக்கு ஒன்றிணைவதை தடுப்பதற்காகவுமே ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கி விட்டு, அவருக்கு பதிலாக மக்கள் கோரிக்கை விடுக்கும் சக்தி மிக்க ஒருவரை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமாராக்கினார் என்று எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. You dont have vote base.
    Your very big alibaba.
    Rangeeeeeeee komada?

    ReplyDelete
  2. மத்திய மாகாணத்தில் உள்ள முஸ்லிம்கள் யாரும் இவனுக்கு தேர்தலில் வாக்களிக்கக்கூடாது. இவன் அலிபபா மட்டுமல்ல, முஸ்லிம்களைத் திட்டமிட்டு கருவருக்கும் குழுவில் இந்த காபிர் மிக முக்கியமானவன் என்பதை இந்த நாட்டில் உள்ள ஒவ் வொரு முஸ்லிமும் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரு விடயம்.

    ReplyDelete

Powered by Blogger.