Header Ads



தேனீரைக் கொடுத்துவிட்டு ஜனாதிபதி கூறியது சூடாக இருந்தது, நான் என்றால் எழுந்து சென்றிருப்பேன்

பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சி கடந்த ஒக்டோபர் 26 இன் பின்னர் பாரிய மாற்றங்களுக்குட்பட்டுள்ளதாகவும் இந்த மாற்றங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கடியாக அமையும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் 26 இற்கு முன்னர் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியொன்று இருக்கவில்லை. தற்பொழுது பலமான எதிர்க் கட்சி உருவாகியுள்ளது. ஒக்டோபர் 26 இற்கு முன்னர் ஜனாதிபதி எதிர்க் கட்சியில் இருக்க வில்லை. தற்பொழுது எதிர்க் கட்சியுடன் இருக்கின்றார்.

கடந்த ஒக்டோபர் 26 இற்கு முன்னர் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியில் 100 இற்கு குறைவாகவே உறுப்பினர்கள் இருந்தனர். தற்பொழுது அந்த நிலைமை மாறியுள்ளது.

ஜனாதிபதியின் அழுத்தம் அரசாங்கத்துக்கு நன்கு உணரக் கூடியதாகவே உள்ளது. பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனத்தின் போது தேனீரைக் கொடுத்து விட்டு, ஜனாதிபதி கூறிய விடயங்கள் நன்கு சூடாகவே இருந்துள்ளது. நான் என்றால் எழுந்து சென்றிருப்பேன் எனவும் விமல் வீரவங்ச எம்.பி. இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் மேலும் குறிப்பிட்டார்.  Dc

2 comments:

  1. விமல் ஒரு மகா நடிகன்

    ReplyDelete
  2. Excuse me. Mr. Meera Lebbe; you are toooooooooooo late. He is not an actor. Great Killadi.

    ReplyDelete

Powered by Blogger.