Header Ads



சிங்கள பௌத்த இனவாதத்தை, கையிலெடுக்கின்றார் மகிந்த - சுனந்த தேசப்பிரிய

மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் குறித்து தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் காணப்படும் கருத்துக்கள் அவர் தீவிர சிங்கள பௌத்த பிரச்சாரத்திற்கு தயாராவதை வெளிப்படுத்தியுள்ளதாக மனித உரிமை செயற்பட்டாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

மகிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் 103 ஆசனங்களை மாத்திரமே கொண்டுள்ள ஐக்கியதேசிய கட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது பணயக்கைதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு சொல்வதை  ஐக்கியதேசிய கட்சி செவிமடுக்காவிட்டால் ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற பெரும்பான்மையை இழக்கவேண்டிவரும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை இயக்கும் கருவி தமிழ் தேசிய கூட்டமைப்பிடமே உள்ளது என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி தனது டுவிட்டரில் கருத்தொன்றை பதிவு செய்துள்ள சுனந்த தேசப்பிரிய தமிழ்தேசிய கூட்டமைப்பை தனது பக்கம் இழுக்க முயன்ற மகிந்த ராஜபக்ச தனது இந்த பழம் புளிக்கும் கதையை சொல்கின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் இந்த அறிக்கையில் உள்ள ஆபத்து என்னவென்றால் இது தமிழ் எதிர்ப்பு இனவாதத்தை கொண்டிருக்கின்றது எனவும் சுனந்த தேசப்பிரிய டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச தீவிர சிங்கள பௌத்த பிரச்சாரத்திற்கு தயாராகின்றார் எனவும் சுனந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. He dont have any option to come to power.recism and war can speak

    ReplyDelete
  2. NAMAL RAJAPAKSA WENT TO SAMPANTHANS HOUSE BEGGING FOR HIS SUPPORT IN ADDITION HE CLLED OVER THE PHONE SOME TNA MPS AND OFFERED MONEY FOR SUPPORT.NOW THEY ARE TELLING DIFFERENT STORIES.NOTHING BUT SOUR GRAPES.

    ReplyDelete

Powered by Blogger.