December 31, 2018

"புத்தரின் சிலைகளை பொருத்தமான, இடங்களில் மாத்திரமே வைக்க வேண்டும்" - கலகம தம்மரங்சி தேரர்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

புத்தரின் சிலைகளை பொருத்தமான இடங்களில் மாத்திரமே வைக்கவேண்டும். கண்ட இடங்களில் வைப்பது புத்த பெருமானுக்கு செய்யும் அகௌரவமாகும். அத்துடன் மாவனெல்லை சம்பவத்துக்கு பின்னணியில் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்கள் இருக்கலாம். அதனால் சிங்கள முஸ்லிம் மக்கள் முரண்பட்டுக்கொள்ளாமல் சிந்தித்து செயற்படவேண்டும் என கலகம தம்மரங்சி தேரர் தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று -31- கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

திகன சம்பவத்தின் பின்னணியில் அரசியல் வாதிகளே இருந்துள்ளதாக நாமல் குமாரவின் வாக்கு மூலங்கள் மூலம் தெரியவந்துள்ளன. அதேபோன்று மாவனெல்லை சம்பவமும் இருந்திருக்கலாம். நாட்டில் இனவாத சம்பவங்களை அரங்கேற்றி அதனை கூட்டு எதிரணி மீது குற்றம் சுமத்தும் நடவடிக்கையே கடந்த காலங்களில் இடம்பெற்றன. 

தற்போதும் அரசியல் பின்னணியாக இதனை மேற்கொண்டு எதிர்க்கட்சியினரை இனவாதிகள்போல் காட்டவே சிலர் இதனை செய்திருக்கலாம். அதனால் சிங்கள முஸ்லிம் மக்கள் இவ்வாறான சம்பவங்கள் மூலம் ஆத்திரம் கொள்ளாமல் நிதானமாக செயற்படவேண்டும் என்றார்.

2 கருத்துரைகள்:

பதவிப் போராட்டம்தான் தற்போதய அகக் கண்களுக்கும் புறக்கண்களுக்கும் பெரிதாகத் தெரிகின்ற. நாட்டு மக்களின் நிலைமை டொலரின் சீரழிவினால மக்கள் படும் துயரம் இவரகளது கண்களுக்குத் தெரிவதில்லை. எல்லாம் ஓசி தானே என்ற தெம்பு அரசியலாளர்களுக்கு இருக்கும் வரை நாடு குட்டிச்சுவரானால் அவரகளுக்கென்ன? தேர்தலில் வென்ற கட்சி தனது பதவிக் காலத்தை முற்றுமுழுவதாக முடிப்பதற்கு அரசியல் சட்டத்தில் இடம் இல்லை. ஆனால் குழப்படியாளர்களின் சட்டத்தில் இடம் உண்டு.

All Muslim wish to punish the culprit who has done this kind of idiotic work, government and police need to investigate deeply to find out the truth not because of Muslim, few Muslim were arrested base on suspecting and end of the investigation they could be innocent, so Budish need to be silent , Most of Sri Lankan are suspecting Anti Muslim political and Budish group who are still targeting Muslim community in different way to launch a massive attack, Rajapaksa , vimal vira vamsa and sambika are suspected politician to achieve some benefits,
if anyone generally thinks, now a days Muslim are carefully walk in sri lanka thinking of past incident by Bu-dish extremist , they know well even small such things can bring big issue in sri lanka, so musims never think to do such things to Budish. Muslim has loving peace ,
all Buhish need to put this on their mind,

Also Muslim like to investigate and punish all culprit who has done past anti Muslim incidents in same manner, those impact were massive including many death. if you do the same job you are the police and defence forces otherwise you are ?????????????

Post a Comment