December 29, 2018

இப்படியான சம்பவங்களில் முஸ்லிம், இளைஞர்கள் எப்படி சிக்கிக்கொள்கிறார்கள்..?

சிலை உடைப்போடு சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற தொனியில் நம் அரசியல் வாதிகளும், இஸ்லாமிய இயக்கங்களும் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதை காணமுடிகிறது.

அப்படியான ஒரு நாசகாரச் செயலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் ஒரு விடயத்தை இந்த அறிக்கைவாதிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நமது நாட்டில் கடந்த காலங்களில் நடந்த இனவாத சம்பவங்கள் அனைத்துக்கும் இடையில் ஒரு ஒற்றுமை இருந்திருக்கிறது.

பிரச்சினையின் ஆரம்பப் புள்ளியில் சில முஸ்லிம் இளைஞர்களின் பெயர்கள் இருக்கும் அவர்கள்தான் இந்தப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தவர்கள் போன்று ஒரு செய்தி பரப்பப்படும்.

பின்னர் அந்த இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள்.

அதற்கு பின்னர் ஒரு இனவாதக் கும்பல் குறித்த இளைஞர்கள் வாழ்ந்த பிரதேசத்துக்கு வந்து அடாவடித்தனங்களில் ஈடுபடும்.

கொலை, கொள்ளை, தீ வைப்பு என்று அவர்களால் முடிந்த எல்லா அநியாயங்களையும் செய்துவிட்டுப் போவார்கள்

மாவனெல்லை சம்பவத்தின் ஆரம்பப் புள்ளியிலும்,  ஒரு முஸ்லிம் இளைஞர் சம்பத்தப்பட்டிருப்பது
பலத்த சந்தேகங்களை உண்டுபன்னுகிறது.

எனவே நமது அரசியல் வாதிகளும் சரி, இஸ்லாமிய இயக்கங்களும் சரி சம்பந்தப் பட்டவர்களுக்கு தண்டனை வழங்குங்கள்.

என்று சொல்வதோடு நிறுத்திவிடாமல்  இப்படியான சம்பவங்களில் முஸ்லிம் இளைஞர்கள் எப்படி சிக்கிக்கொள்கிறார்கள் ?

அவர்கள் கைது செய்யப்பட்டதன் காரணம் என்ன ?

அந்த இளைஞர்களின் ஊர் மற்றும் குடும்பப் பின்னனி என்ன ?

இப்படியான தகவல்களைப் பெற்றுக்கொண்டு மக்களை தெளிவுபடுத்த முயற்சிக்க வேண்டும்.

ஒரு சிறிய சம்பவம் நடந்தாலும், அதற்கு முஸ்லிம்களே உண்மையாக காரணமாக இருந்தாலும் கூட அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்க படவேண்டுமே தவிர ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பலியாக்க இடமளித்துவிடக் கூடாது.

இதற்காக போராடுவதுதான் நமது அரசியல் மற்றும் மார்க்கத் தலைமைகளின் பொறுப்பு.

மாறாக "எங்கடவன்தான் எல்லாத்துக்கும் காரணம்" என்று நமது முகத்தில் நாமே துப்பிக் கொண்டு
வாங்கிக் கட்டிக் கொள்வதல்ல.

-Safwan Basheer-

5 கருத்துரைகள்:

Exactly correct statement.

அக்குறணை சொந்தங்கள் facebook மூலம்
26 December at 19:44 ·
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சொந்தங்களே! உடைத்துவிட்டு திருப்பி உடைக்கவும்,தீயிடவும் தயாராகும் நிலைக்கு இனவாதிகள் திட்டமிட்டுள்ளார்கள் போலும், ஆகவே நாம் மிக மிக கவனமாக பொறுமையோடும், அவதானத்துடனும் இருப்போம், யா அல்லாஹ் எங்களின் அணைத்து விடயங்களிலும் பாதுகாப்பு தருவாயாக.

சரியான அறிக்கை எனினும் இந்த அறிக்கை இவ்விடத்தில் மற்றும் கூறுவது பொருத்தமல்ல இதனை பகிரங்கமாக நமது அரசியல் தலைவர்கள் உலமாக்களுக்கு விளங்கும்படி கூறப்பட வேண்டும் இல்லையெனில் நீங்கள் கூறியதுபோல் எங்கடா அவன் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று ஒரு அறிக்கையை வெளியிடுவார்கள் நிச்சயமாக ஒரு சிறந்த முஸ்லிம் இவ்வாறான விடயங்களில் ஈடுபடமாட்டான் சமூகத்தின் மீது மிகவும் பற்று உள்ளவனாக இருப்பான் இது போ தைகும் காசுக்கும் சோரம் போகும்முஸ்லிம் என்ற நாமத்தை வைத்துக் கொண்டு வாழும் ஒரு சிலரால் ஏற்படும் பெருத்த சமூக நியாயமாகும் இவ்வாறானவர்களை நமது சமூகமும் அடையாளம் காணவேண்டும் எனவே கைது செய்யப்பட்டவர்கள் யார் அவர்கள் பின்னணி என்ன அவர்கள் தொழில் என்றுமுஸ்லிம் மார்க்க விடயத்தில் ஏவ்வாறான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதை அறியவேண்டும் முனாபிக் வேஷத்தில் இருக்கும் வேடதாரிகளும் நமது சமூகத்தில் தற்போது ஊடுருவியுள்ளனர் இவர்கள் பணத்திற்காக மட்டுமே மார்க்கத்தை அணிந்துள்ளனர் இவ்வாறானவர்களை இலக்கு வைத்து தான் காபிர்கள் தமது காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர் இதனை எமது அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் உலமாக்களும் துல்லியமாக அறிந்து அதனை பகிரங்கப்படுத்தவேண்டும் அல்லாஹ் நமது சமூகத்தை பாதுகாப்பானாக

இரத்தின சுருக்கமான பதிவு.

Post a Comment