Header Ads



யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், புதிதாக பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்கு உதவி கோரல்

-பாறுக் ஷிஹான் - 

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புதிதாக  பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்கு  மஜ்லீஸ் அமைப்பு உதவி கோரல் ஒன்றினை முன்வைத்துள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் குறித்த பள்ளிவாசலுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் நிதிப்பற்றாக்குறை காரணமாக நிர்மாணிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகின்றது.எனினும் இப்பள்ளிவாசல் விரைவாக பூர்த்தி அடைய    மாணவர்களால்   பல முயற்சிகள் மேற்காெள்ளப்பட்டு வருகிறன.

மேற்படி வளாகத்தில் தற்போது வரை சுமார் 105 க்கு மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் பொறியியல் பீடம் விவசாய பீடம் தொழில்நுட்ப பீடம் ஆகிய மூன்று பீடங்களில் கல்வி கற்றுவருகின்றனர்.

மேலும்  வளாகத்தில்  நாட்டின் பல பிரதேசத்தில் இருந்தும் பல கலாசாரத்தை கொண்ட மாணவர்கள் தமது கல்வியை தொடருகின்ற நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம்  ஒவ்வொருடைய கலாச்சாரத்தை மதித்து நான்கு இனத்தவருக்கும் அவர்களுடைய மத வணக்கஸ்தலங்களை அமைப்பதற்கு இடம் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் முஸ்லீம் மாணவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்  முதல் கட்டமாக தற்காலிகமாக ஒரு பள்ளிவாசல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது .இதற்காக கிட்டதட்ட ரூபாய் 6 மில்லியன் தேவைப்படுவதாகவும் யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மஸ்லீஸ் அமைப்பு   உதவும் நல்லுள்ளங்களிடம் இருந்து உதவியை  எதிர்பார்க்கிறது

எனவே அவ்வுதவியை   செய்ய விருப்பமானவர்கள் தொடர்புகளிற்கு கீழ் உள்ள பிரதிநிதிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.

Mas. Abdur Rahman (Auditor. Muslim Majlis. University of jaffna )
0771504154 / 0717310838

Mas. A.Ajmal Hussain
(2nd year. Faculty of Technology. University of Jaffna)


0715430376

4 comments:

  1. படிக்கின்ற மாணவர்களுக்கு கல்வியை, அறிவை ஊட்டுங்கள். பள்ளிவாசல், கோயில், தேவாலயம், புத்தர் சிலை மந்திரம், மாயம், பூஜை, ஜெபம் என்று செய்யாமல் படித்து முன்னேறும் வழியையும், தன்னம்பிக்கையையும் ஊட்டுங்கள்.

    ReplyDelete
  2. From that 120 student haw many of them paying 5time

    ReplyDelete
  3. Please publish the bank A/C details for this mosque project. These details would facilitate any one who is willing to contribute towards this project.

    ReplyDelete
  4. Yes, please display the details of bank account.

    ReplyDelete

Powered by Blogger.