Header Ads



ஜனாதிபதியை இரகசியமாகவேனும் வெளிநாட்டிற்கு, அழைத்துச்சென்று சிகிச்சை வழங்குங்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனைவி ஜயந்தி சிறிசேனவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேம சந்திர முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. இலங்கையில் முடியாவிட்டால் இரகசியமாக சரி அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று தேவையான சிகிச்சை வழங்குமாறு ஹிருணிக்கா கேட்டுக் கொண்டுள்ளார்.

 அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றியவர்,

சர்வதேச ஊடகவியலாளர்களிடம் ரணில் விக்ரமசிங்க மீது மைத்திரி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

அந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் அதனை ஏன் நிரூபிக்காமல் இருக்கின்றார். பிணை முறி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்தார். அதன் அறிக்கையை ஜனாதிபதி தன்னிடம் வைத்து கொண்டுள்ளார்.

அதன் மூலம் ரணில் குற்றவாளியாக்கப்பட்டுள்ளாரா என நான் ஜனாதிபதியிடம் கேட்க விரும்புகின்றேன். அப்படி என்றால் அதனை தற்போது பகிரங்கப்படுத்த முடியும்.

அத்துடன் ஜனாதிபதி செயலகத்தில் சம்பளம் பெறும் நபர் ஒருவர் ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறி நாடு முழுவதும் பிரபல்யமாகினார்.

தற்போது ஜனாதிபதி சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற ரீதியில் பொலிஸ் மா அதிபரை குற்ற விசாரணை திணைக்களத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிடுகின்றார்.

தவறு செய்தவர்களை தண்டிக்க முடியும். எனினும் ஏன் அப்படி செய்யாமல் இருக்கின்றார். இந்த ஜனாதிபதி குறித்து எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. இவரது கருத்துக்களில் பரஸ்பல மாற்றங்கள் உள்ளது. இவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. உறுதியாகியுள்ளது.

அவரை வெளிநாட்டிற்கேனும் அழைத்து சென்று சிகிச்சை வழங்குமாறு ஜனாதிபதியின் மனைவி -மகளிடம் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. ஜனாதிபதிக்கு மட்டுமல்ல. பாராளுமன்ற 225 க்கும் இது அவசியம்.

    ReplyDelete

Powered by Blogger.