Header Ads



மகிந்த ராஜபக்சவை பிரதமர், பதவியில் இருந்து நீக்க முடியாது

நீதிமன்ற தீர்ப்பினாலேயோ அல்லது நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவந்தாலும் கூட மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையானது அரசியலமைப்புக்கு முரணானது என்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்குப் பின்னர், இன்று மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியிருந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நீதிமன்ற தீர்ப்பினாலேயோ அல்லது நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவந்தாலும் கூட மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முடியாது. மகிந்த தானாக பிரதமர் பதவியில் இருந்து விலகினாலே தவிர வேறு எந்த வகையிலும் பதவியிலிருந்து நீக்க முடியாது என்றார்.


4 comments:

  1. சிறையில் நிரந்தரமாக வாழ்ந்து மடியவேண்டிய இதுபோன்ற பயங்கரவாதிகளை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திலிருந்து களவாடிய கோடான கோடி மக்களின் பணத்தைச்சூறையாடி பதுக்கிவைத்திருக்கும் இதுபோன்ற கள்ளர்களை விட்டுவைத்தமைதான் ரணில் அனுபவித்த நிலைமைக்குக் காரணம் என்பதை இன்னும் விளங்காதுபோனால் எஞ்சுவது அழிவுமட்டும்தான் என்பதை ஆளும் கட்சி விளங்கிக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. You always day dream only.m
    May allah give you rightpath

    ReplyDelete
  3. பொன்ன வேசாமவன்

    ReplyDelete
  4. ஆமா, அந்த பதவிக்காக அழையும் அந்த ஆசாமி தனக்காக வால் ஆட்டும் எருமை கூட்டத்துக்கு வேண்டுமானால் பிரதமராக இருந்துட்டு போட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.