Header Ads



புத்தர் சிலைக்கு சேதப்படுத்திய அடிப்படைவாதக், குழுக்கு பின்னால் அரசியல் சக்தியொன்று உள்ளது

மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்திய அடிப்படைவாதக் குழுக்களுக்குப் பின்னால் அரசியல் சக்தியொன்று உள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குள் இனவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கு குழுவொன்று முயற்சிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிலை உடைக்கப்பட்ட இடங்களுக்கு கண்காணிப்பு கள விஜயமொன்றை மேற்கொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சிலை உடைப்பில் சம்பந்தப்பட்ட குழுவினர், ஏற்கனவே அங்கத்துவம் பெற்றிருந்த அமைப்பினால் வெளியேற்றப்பட்டவர்கள் என தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அடிப்படை வாதக் குழுக்கள் எல்லா மதங்களிலும் உள்ளன. சகல மதங்களிலும் உள்ள நடுத்தர சிந்தனைப் போக்குள்ளவர்கள் ஒன்றிணைந்து இந்த அடிப்படைவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சி எடுத்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாம் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இந்த சம்பவத்தை மூடி மறைக்க அரசாங்கத்துக்கு எந்தத் தேவையும் இல்லை.

எந்தவொரு மதத்திலும் மதப் போதகர்கள் இதுபோன்ற நடவடிக்கைக்கு எந்தவகையிலும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்பதே உண்மையாகும். இதுபோன்ற செயற்பாடுகளுக்கு இந்நாட்டில் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.   

No comments

Powered by Blogger.