Header Ads



கலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..?

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட்களுக்குள் கொழும்பு அரசியல் மேலும் பரபரப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அரசியல் வரலாற்றில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் ஏராளம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், நம்பிக்கைத் தீர்மானம் இதுவரை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதில்லை.

இந்நிலையில், இம்முறை ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவருவதற்கு ஆலோசனை செய்யப்பட்டுவருவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவாக இந்த தீர்மான யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், இந்த யோசனைக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் இறுதி சந்தர்ப்பத்திலேயே தீர்மானிக்கப்படும். அதற்கமைய 11ஆம் திகதி இரவு அல்லது 12ஆம் திகதி காலை தீர்மானிப்படும்.

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு வட, கிழக்கு மக்கள் அச்சப்படுகின்றனர். இதனாலேயே சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பு வெளியிடுகின்றோம். வேறு காரணங்கள் ஒன்றும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ரணிலுக்கு ஆதரவான தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எமக்கு ரணில் விக்ரமசிங்க மீதும் நம்பிக்கையில்லை. மகிந்த ராஜபக்ஷவின் மீதும் நம்பிக்கையில்லை. நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரு விடயத்திற்காக மாத்திரமே நாம் போராடுகின்றோம்.

அத்துடன் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் போராடுகின்றோம். ஆகையினாலேயே மகிந்த ராஜபக்ஷ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து, அதற்கு ஆதரவாக வாக்களித்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மகிந்த ராஜபக்ச மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து வாக்களித்தன. ஆனால், மகிந்த தரப்பினரோ ஜனாதிபதியோ அந்த தீர்மானத்தை ஏற்காத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவர முடிவெடுத்தது. தற்போது மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமது முடிவில் மாற்றத்தைக் கொண்டுவரும் நிலை இருப்பதாக தெரிகிறது.

அவர்களின் இம்முடிவு ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும் அரசியல் நெருக்கடியாக மாறும் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1 comment:

  1. RNL protected the court cases of crime makers... So there is no reason to select him as perime. BUT There should be a GOOD choice in place of all these unpredictable politicians, to rule the land.

    ReplyDelete

Powered by Blogger.