Header Ads

ஜனநாயகம் பற்றி பேச, ரணிலுக்கு எந்த உரிமையும் இல்லை

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஐக்கிய தேசியக்கட்சியின் வெற்றியோ, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று வழங்கிய தீர்ப்பல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

பொருளாதாரத்தை அழித்து நாட்டின் வளங்களை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனநாயகத்தை பற்றி பேச எந்த உரிமையும் கிடையாது.

குறிப்பாக தனது கட்சியின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாத தலைவரான ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனநாயகம் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Jvp இடம் ஒரு கேள்வி

    நீங்கள் மஹிந்த ராஜபக்ஷ வேண்டாம் என்று கூறினீர்கள்.
    தற்போது ரணில் விக்கிரமசிங்க வேண்டாம் என்று கூறுகின்றீர்கள்.

    நாளை வேறு ஒரு நபர் வந்தால்? ???

    மற்றவர்களை குறை கூறுவதை தவிர்த்து உங்களை பாராளுமன்றம் அனுப்பிய மக்களுக்காக நல்ல தலைவனை முன்மொழியுங்கல்

    ReplyDelete
  2. Jvp இடம் ஒரு கேள்வி

Powered by Blogger.