Header Ads



வாக்குறுதியை நிறைவேற்றினார் ஜனாதிபதி


அரங்கேற்ற கலைகள் துறையில் முன்னேறுவதை தனது கனவாகக்கொண்ட பொலன்னறுவை ரோயல் கல்லூரி மாணவி பிரபோதி லஹிருனியின் எதிர்பார்ப்பொன்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று நிறைவேற்றி வைத்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையின் பின்னர் அரங்கேற்ற கலைகள் பீடத்திற்கு சென்று அத்துறையில் முன்னேறுவது மாணவி பிரபோதி லஹிருனியின் கனவாகும். இதற்காக இசைத் துறையை தெரிவு செய்த லஹிருனி தனது முக்கிய வாத்தியக் கருவியாக சிதாரை தெரிவுசெய்தார்.

பல்வேறு பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இம்மாணவியின் பெற்றோர் அவருக்கு இந்த இசைக் கருவியை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வசதியில்லாத காரணத்தினால் இம்மாணவி மிகவும் அநாதரவான நிலையில் இருந்தார்.

இவரைப்போன்றதொரு மாணவரான ஷாலிக லக்ஷான் என்ற மாணவனின் புதிய வீட்டுக் கனவை நிறைவேற்றி வைப்பதற்காக கடந்த டிசம்பர் 08ஆம் திகதி ஜனாதிபதி அவர்கள் பொலன்னறுவை கனங்கொல்ல என்ற பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.

அச்சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் மீது பாசங்கொண்ட தந்தையாக ஜனாதிபதி அவர்கள் தனது கோரிக்கையையும் நிறைவேற்றித் தருவார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் மாணவி பிரபோதி லஹிருனி ஜனாதிபதி அவர்களின் அருகில் சென்றார்.

உண்மையான தந்தைக்குரிய பாசத்துடன் அம்மாணவியின் கோரிக்கையை செவிமடுத்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அக்கோரிக்கையை விரைவில் நிறைவேற்றித் தருவதாக அம்மாணவியிடம் உறுதியளித்தார்.

ஒரு சில நாட்களில் அம்மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்ததுடன், இன்று முற்பகல் தனது பெற்றோருடன் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த பிரபோதி லஹிருனி தனது சிதாரை ஜனாதிபதி அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

2 comments:

  1. இந்த இசைக் கருவியை "சிதார்" என்றா சொல்கிறீர்கள்????

    ReplyDelete

Powered by Blogger.