Header Ads



முத்து சிவலிங்கம், பல்டி அடிப்பாரா..?


எம் பி பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு கட்சித்தலைவர் ஆறுமுகம் விடுத்த வேண்டுகோளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் எம் பி யும் அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினருமான முத்து சிவலிங்கம் நிராகரித்து விட்டார்.

எம் பி பட்டியலில் அடுத்துள்ள - கட்சியின் பொதுச் செயலாளர் அனுஷா சிவராஜாவுக்கு வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த இராஜினாமாவை செய்யும்படி ஆறுமுகம் கோரியதாகவும் - ஆனால் அதனை நிராகரித்த முத்து சிவலிங்கம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய பேச்சுக்களை நடத்தி வருவதாகவும் அறியமுடிகின்றது.

“இப்போது அமைச்சு - இராஜாங்க அமைச்சு - பிரதியமைச்சு பொறுப்புக்கள் வழங்குவதில் சிக்கல் நிலைமை உள்ளது. ஆனால் அமைச்சு ஒன்றின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளராக உங்களுக்கு பதவி ஒன்றை தருகிறோம்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் சிவலிங்கத்திடம் கூறியுள்ளதாக தகவல்...

அதை ஏற்றால் அவர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் எந்நேரமும் இணையலாம்.

எப்படியோ - இன்று காலை முதல் முத்து சிவலிங்கத்தை தொடர்பு கொள்ள கட்சி தலைமை முயன்று வருகிறது. ஆனால் அவர் தொடர்பில் இல்லை ...!

-Sivarajah-

No comments

Powered by Blogger.