Header Ads



எமக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கியிராவிடின், மதம் பிடித்த யானையின் செயற்பாடுகளை புரிய வைத்திருப்போம்.

உறங்கிக் கொண்டிருந்த யானைகளை எழுப்பி விட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி செலுத்தியாக வேண்டும். ஜனாதிபதியின் உதவியின்றி இந்தளவு மக்கள் கூட்டத்தை திரட்டியிருக்க முடியாதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, உறங்கிக் கொண்டிருந்த யானை எழும்பியதால் உண்டான விளைவே இதுவாகும். ஆனால் எழும்பிய யானைக்கு மதம் பிடித்தால் என்னவாகும் என இதுவரை யாரும் பார்க்கவில்லை. 

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து, எமக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கியிராவிடின் இதே காலிமுகத்திடலில் மதம் பிடித்த யானையின் செயற்பாடுகளை புரிய வைத்திருப்போம்.

இனி நாமிருக்கும் வரை மஹிந்த ராஜபக்ஷ மீளெழுச்சி அடைய முடியாது. எம்மோடு இணைந்து அரசாங்கம் அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

அதேபோன்று பொதுஜன பெரமுனவில் இருந்தும் அங்கத்தவர்களை எம்மோடு இணைத்துக் கொள்வோம். மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரை தனியாளாக்கி, நாம் ஒரு வலுவான கூட்டணியாக முன்வருவோம்.

காலிமுகத்திடலில் திங்கட்கிழமை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஜனநாயக வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.