Header Ads



ரணிலை மீண்டும் பிரதமராக நியமித்தமையால், அரசியல் நெருக்கடி தீரப்போவதில்லை

ஐக்கிய தேசிய கட்சியின்  தலைவர் ரணில்  விக்ரமசிங்ககை மீண்டும்  பிரதமராக  நியமித்துள்ளமை அரசியல்  நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வாக அமையாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாரிய நெருக்கடிக்கு தள்ளியே ஐக்கிய தேசிய முன்னணி  மீண்டும் அதிகாரத்தை பெற்றுள்ளது என்றார்.

மேலும் உயர் நீதிமன்றம் அரசியல் நெருக்கடியினை தணிப்பதை விடுத்து  தீவிரப்படுத்தியுள்ளது.  தற்போது ஜனாதிபதி, பிரதமரிடம் என்னென்ன அதிகாரங்கள்   பொறுப்பாக்கப்பட வேண்டும் என்று  அதிகார போட்டி  இடம் பெறும். எவ்வாறு இருப்பினும்  நாங்கள் ஜனாதிபதியுடனே  தொடர்ந்து செயற்படுவோம்.

ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளி  கட்சிகளாக  மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ் தேசிய  கூட்டமைப்பும் செயற்பட்டமையின்  காரணமாக  ஐக்கிய தேசிய  கட்சி எவ்வித  கட்டுப்பாடுகளும் இன்றி  தனது விருப்பத்தின் பெயரில் அரசாங்கத்தை நிர்வகித்தது எனவும் தெரிவித்தார்.   

5 comments:

  1. Go to your bed and sleep
    Dont act like.....

    ReplyDelete
  2. இந்த இன்னும் உசிரோட இருக்கானா

    ReplyDelete
  3. yes now you are very old
    go home and take rest
    sleep well
    so you no need to talk dirty words
    you are very old now
    please go jaffna , take rest at son in laws house

    ReplyDelete
  4. ungaluku rombatthan aasay..but nadakkathu sir..unga wayasukku meeruna petchu...ungaluk ippo romba kowam waruthu..y...we know nerayya emaatram
    ..go pls ..

    ReplyDelete

Powered by Blogger.