Header Ads



4 ஐதேக MP களுக்கு சுதந்திர, கூட்டமைப்பில் இணையுமாறு பகிரங்க அழைப்பு

ஐக்கிய தேசிய கட்சியை கைவிட்டு தமது கட்சியில் இணையுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு , ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இத்தினங்களில் அதிருப்தியில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறந்த தீர்வு சுதந்திர கூட்டமைப்புடன் இணைதலே என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாபா அபேவர்தன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த தினங்களில் வௌியிட்ட கருத்துக்கள் தொடர்பில் எமது செய்திச் சேவைக்குத் கருத்து தெரிவித்த போது அவர் இதனை குறிப்பிட்டார்.

சமிந்த விஜேசிறி , ஹேஷா விதானகே , ஹெக்டர் அப்புஹாமி மற்றும் லக்ஷ்மன் விஜேமான்ன உள்ளிட்ட அமைச்சு பதவிகள் கிடைக்காத ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் சிலரின் நடவடிக்கைகள் குறித்து கடந்த தினங்களில் விமர்சன ரீதியான கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.