Header Ads



"ரணில் மீது 3 பக்கங்களிலிருந்து தாக்குதல்"

நிறைவேற்று அதிகாரம், பலம்  வாய்ந்த எதிர்கட்சி, பாரிய மக்கள்   எதிர்ப்பு  சக்தி ஆகிய இம்மூன்று சவால்களையும்  எதிர் கொண்டு  எவ்வாறு பிரதமர்  ரணில்  விக்ரமசிங்க புதிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வார்  என்று பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ  நானயக்கார  கேள்வி  எழுப்பினார்.

கலாநிதி என். எம் பெரேரா மத்திய நிலையத்தில்    இன்று புதன் கிழமை  இடம் பெற்ற ஊடகியலாளர்  சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

 நிறைவேற்று  அதிகாரம்,   பலம்  வாய்ந்த  எதிர்  கட்சி,   மற்றும்   பாரிய  எதிர்ப்பினை   வெளிப்படுத்தும்   பெரும்பான்மை  மக்கள்    சக்தி  ஆகிய மூன்று தரப்பின்   நடுவே இன்று  பிரதமர்  ரணில்  விக்ரமசிங்க  காணப்படுகின்றார்.  பல கோணங்களில் இருந்து அரசாங்கத்திற்கு  தொடர்ந்து  தாக்கங்களே ஏற்படும். இவ்வாறான சவால்களுக்கு மத்தியில்   அரசாங்கத்தை முன்னெடுப்பது சந்தேகமே. ஆகவே   உடனடியாக பொதுத்தேர்தலை நடத்தினால்  ஒரு  தீர்வு கிடைக்கும்  என்றார்.

No comments

Powered by Blogger.