Header Ads



தேசிய ரீதியில், ரிஸா மொஹமட் 2 ஆம் இடம்பெற்று சாதனை

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று (29) வெளியாகின. அதற்கமைய தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன. 

இதனடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

உயிரியல் விஞ்ஞான பிரிவு 

முதலாம் இடம் - கலனி ராஜபக்ஷ - கம்பஹா ரத்னவெலி மகளிர் பாடசாலை இரண்டாம் இடம் - ரவிந்து ஷஷிக - கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி மூன்றாம் இடம் - ஹக்கீம் கரீம் - மாத்தளை சாஹிரா கல்லூரி 

பௌதிக விஞ்ஞான பிரிவு 

முதலாம் இடம் - சத்துனி விஜேகுனவர்தன - கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயம் இரண்டாம் இடம் - சமிந்து லியனகே - காலி ரிச்சட் கல்லூரி மூன்றாம் இடம் - தெவிந்து விஜேசேகர - கொழும்பு ரோயல் கல்லூரி 

வர்த்தக பிரிவு 

முதலாம் இடம் - கசுன் விக்ரமரத்ன - குருணாகல் மலியதேவ வித்தியாலயம் இரண்டாம் இடம் - உச்சினி ரணவீர - கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலை மூன்றாம் இடம் - மலிதி ஜயரத்ன - கொழும்பு மியுசியஸ் கல்லூரி 

கலை பிரிவு 

முதலாம் இடம் - சேனதி அல்விஸ் - பாணந்துறை லைஸியம் சர்வதேச பாடசாலை இரண்டாம் இடம் - சித்துமினி எதிரிசிங்க - குருணாகல் மலியதேவ வித்தியாலயம் மூன்றாம் இடம் - இஷானி உமேஷா பிட்டிகல - கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலை 

பொறியியல் தொழில்நுட்பலியல் பிரிவு 

முதலாம் இடம் - யசாஸ் பத்திரன - கொழும்பு ஆனந்தா கல்லூரி இரண்டாம் இடம் - தரிந்து ஹேஷான் - கொழும்பு ஆனந்தா கல்லூரி மூன்றாம் இடம் - சேஷான் ரங்கன - நிக்கவரெட்டிய மஹாசேன் கல்லூரி 

தொழில்நுட்பவியல் பிரிவு 

முதலாம் இடம் - சந்துனி கொடிப்பிலி - கம்புருப்பிட்டிய நாரன்தெனிய மத்திய மகா வித்தியாலயம் இரண்டாம் இடம் - ரிஸா மொஹமட் - சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம் மூன்றாம் இடம் - விசிந்து லக்மால் - ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம்

1 comment:

  1. Masha Allah. our dreams are getting through after hard works done by late education minister Dr Badiuddin Muhamood. However more works need to be done by our children and parents. Parents must make our children understand the value of education.

    ReplyDelete

Powered by Blogger.