Header Ads



2 அமைச்சுக்களுக்காக இறுதிவரை, போராடிய ரணில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது புதிய அமைச்சரவையை நியமிப்பது தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பிரதமருடன் சில ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இரவு 8 மணியளவில் ஆரம்பமாகிய இந்த கலந்துரையாடல் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக சென்றுள்ளது.

அங்கு ஜனாதிபதியினால் அமைச்சர் பதவி வழங்குவதற்கு நிராகரிக்கப்பட்ட இரண்டு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இன்று காலையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாலித்த ரங்கே பண்டார ஆகியோர், அமைச்சர்கள் பட்டியலில் இருந்து ஜனாதிபதியால் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.