December 31, 2018

மாவ­னெல்­லையில் ஜனவரி 11 வரை தடை ஆர்ப்பாட்டத்திற்கு தடை - நீதிபதி வழங்கிய உத்தரவு இதோ

மாவ­னெல்ல பகு­தி­களில் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­டமை தொடர்­பாக எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் பௌத்த பிக்­குகள் அடங்­கிய குழு­வி­னரால் கடந்த 29ஆம் திகதி நடாத்­த­வி­ருந்த ஊர்­வ­லத்­திற்கு மாவ­னெல்லை மஜிஸ்திரேட் நீதி மன்­றத்தால் தடை­யுத்­த­ர­வொன்று பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

குற்­ற­வியல் வழக்கு அமு­லாக்கல் சட்­டத்தின் 106 (1) உறுப்­பு­ரைக்­க­மைய மேற்­கொள்­ளப்­பட்ட மேற்­படி நீதி­மன்ற பணிப்­புரை வரு­மாறு: 2018.12. 28 ஆம் திகதி மாவ­னெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி எம்.டீ.டீ. நிலங்க மூலம் மாவ­னெல்ல ம/உ வழக்கு இலக்கம் பீ.11333/2018 இன் கீழ் அறிக்­கை­யி­டப்­பட்ட கார­ணி­க­ளுக்­க­மைய, மெதி­ரி­கி­ரியே புஞ்­ஞ­சார தேரரின் தலை­மையில் 2018.12.29 ஆம் திகதி மாவ­னெல்ல நக­ரத்தில் நடாத்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஆர்ப்­பாட்டப் பேர­ணியால் முஸ்­லிம்­க­ளுக்கும் சிங்­கள மக்­க­ளுக்கும் இடையே குழப்­பங்கள் விளை­யக்­கூ­டிய சாத்­தி­யங்கள் உரு­வா­கலாம்  என்று நீதி­மன்றம் கரு­து­கி­றது.

அதனால் மேலே குறிப்­பி­டப்­பட்ட ஆர்ப்­பாட்ட நிகழ்வை நிறுத்­து­மாறு 1979 / 15ஆம் இலக்க குற்­ற­வியல் வழக்கு அமு­லாக்கல் சட்­டத்தின் 106(1) உறுப்­பு­ரைக்­க­மைய மெதி­ரி­கி­ரியே புஞ்­ஞ­சார தேரர் ஆகிய உங்­க­ளுக்கும் உங்­களைப் பின் தொடர்­வோ­ருக்கும் 2018-.12-.29 ஆம் திகதி முதல் 2019.-01-.11 ஆம் திக­தி­வரை ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­துதல், ஏற்­பாடு செய்தல், ஒன்று கூடுதல், ஆர்ப்­பாட்டக் கூட்­டங்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வது போன்­ற­வற்றில் ஈடு­ப­டா­தி­ருக்­கவும் புஞ்­ஞ­சார தேரர் ஆகிய உங்­க­ளுக்கும் உங்­களைப் பின் தொடர்­வோ­ருக்கும் இத்தால் பணிப்­புரை விடுக்­கின்றேன் என்று மாவ­னெல்ல மஜிஸ்திரேட் நீதி­மன்ற நீதி­ப­தியின் பணிப்­பு­ரையில் தெரி­விக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

1 கருத்துரைகள்:

மனிதர்கள் எல்லோரும் மிகவும் நல்லவரகள்தான். ஆயினும் தன்னுடைய சோம்பேறி வாழ்க்கைக்கு மேலும் மேலும் உயிர் கொடுக்க கொடுக்க வேண்டுமன்பதற்காக தன் மக்களையே பகடையாகப் பாவிக்கும் சொற்ப மனித விலங்குகளுக்கு மத்தியில் நாங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படியான வன்முறைகளால் எந்தப் பொதுமகன் தன் வாழ்க்கையை சீரமைத்துக்கொண்டான். தமது வாழ்க்கையின் மேம்பாட்டிற்காக அரசியலாலர்களும், பிற்போக்குச் சக்திகளும் மக்களைப் பயன்படுத்துகினறனர். இவரகளுல் நாட்டின் பிரதம அமைச்சர்களாகவும், அமைச்சரகளாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் பதவி வகித்த வகிககின்ற பதவி வகிக்கின்றவரகளும் அவரகளது அடிவருடிகளும்தான் காரணமாக இருக்கின்றார்கள் என்பது வரலாற்று உண்மை.. இந்த அதி முட்டாள்த்தனமான செயற்பாடுகளால் நாடோ, ஏற்பாட்டாளர்களோ அன்றேல் பாதிக்கபபட்டவரகளோ எவ்வித நன்மையினையும் அடையவில்லை. மாறாக ஒவவொரு குழப்பகரமான சந்தர்ப்பத்திலும் முழு நாடும் 15 வருட முன்னேற்றத்தை இழந்து செல்கின்றன.

Post a Comment