Header Ads



"மாவனல்லை சம்வம்" - 11 முக்கிய குறிப்புக்கள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல்
-NSC Media Unit-  

1. மாவனல்லை பிரதேசத்தில் நடந்துள்ள சம்வங்கள் அதிர்ச்சியையும் கவலையையும் தருகின்றன.

2.இப்படியான சந்தர்ப்பங்களில் அனைவரும் மிகுந்த பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

3.முஸ்லிம் சமூகத்தையும், பெரும்பான்மையினரையும் மோதவிட பெரும்பான்மை சமூத்தைச் சேர்ந்தவர்களே இதனைச் செய்திருக்க வாய்ப்புண்டு.

4.முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எவராவது இதில் ஈடுபட்டதாக விசாரணைகளின் பின்னர் தெரிய வந்தால் அவர்கள் கடுமையான தண்டணைக்குள்ளாக்ப்பட வேண்டும்.

5.முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த எவராவது இந்த பாதகத்தில் ஈடுபட்டதாகத் தெரிய வந்தால் அதனை பொதுமைப்படுத்தி முழு முஸ்லிம் சமூகத்தினதும் தவறாகப் பார்க்க வேண்டாம் என பெரும்பான்மை சமூகத்தவர்களுக்கு நாம் கூற வேண்டும். திகனைச் சம்பவம் பரவலாக்கப்பட்டதும் இப்படித் தான்

6.சமூக வலைத்தங்களில் துவேஷ உணர்வை சந்தர்ப்பவாதிகள் வேகமாகத் தூண்டி வருவது நாட்டுக்கே ஆபத்தாக முடியும். நாடு ஏற்கனவே பொருளாதார ரரீதீயில் மிகவுமே பின்தங்கிய நிலையில் இருப்பதால் மற்றொரு இனக்கலவரம் ஏற்படுமாயின் நிலை மோசமாகி அனைத்து இனங்களையும் அது பாதிக்கும்.

7. இப்படியான இக்கட்டான சூழ்நிலைகளில் மதத் தலைவர்கள் கல்விமான்கள் ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகள் மற்றும் பொறுப்புக்களை வகிப்பவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

8.அல்லாஹ்வின் பால் மீண்டு உதவியும் பாதுகாப்பும் தேடுவோம்.

9.பிற மத தலைவர்கள் உயர் அதிகாரிகள் போன்றோருடன் மிக அவசரமாக கலந்துரையாடி தேவையான ஏற்பாடுகளைச் செய்வோம்.

9.குறித்த குற்றச் செயலுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை ஆணித்தமாகக் கூற வேண்டும்.

10. இளைஞர்கள் மிகச் சரியாக வழிநடாத்தப்படாததனால் ஏற்பட்ட விளைவு தான் இது என்ற பாடத்தைப் படித்து இளைஞர்கள் விடயமாக இனிமேலாவது கவனமெடுப்போம்.

11.சமுக வலைத் தளங்களில் எவராவது முஸ்லிம்ககளைத் தூஷித்தால் அதே பாணியில் நாமும் தூஷிக்காமல் அறிவு பூர்வமாகவும் நிதானமிழக்காமலும் உரையாடுவோம்.

அல்லாஹ் அனைவரையும்  நாட்டையும் பாதுகாப்பானாக!

No comments

Powered by Blogger.