Header Ads



இஸ்மாயில் MP தடுத்து வைப்பு என்கிறார் றிசாத், வீட்­டிற்கு இது­வரை வர­வில்லை என்கிறார் மணைவி

அகில இலங்கை  மக்கள்  காங்­கி­ரஸின்  தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கலா­நிதி எஸ்.எம்.எம். இஸ்­மாயில், அர­சியல் தேவை­க­ளுக்­காக சிலரால் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் இதன் பின்­ன­ணியில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்­லா­கம   இருப்­ப­தா­கவும் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் 'விடி­வெள்ளி'க்குத் தெரி­வித்தார்.

கடந்த   வெள்­ளிக்­கி­ழ­மை­யி­லி­ருந்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இஸ்­மா­யிலைக் காண­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கொழும்­பி­லுள்ள அவ­ரது  வீட்­டிற்கு அவர் இது­வரை வர­வில்லை என்­பதை அவ­ரது மனை­வியும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் ரிஷாத் பதி­யுதீன் எம்.பி. குறிப்­பிட்டார்.

இஸ்­மாயில் இவ்­வாறு  கட்­சிக்குத் துரோகம்  செய்­வா­ரென  தான்  கன­விலும்  நினைத்­தி­ருக்­க­வில்லை என்றும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இஸ்­மா­யிலை கிழக்கு ஆளுநர்  ரோஹித்த போகொல்­லா­கம தடுத்து வைத்­தி­ருப்­ப­தாக  அகில இலங்கை  மக்கள்  காங்­கி­ரஸின்  பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் அமீர் அலியும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.  நேற்று அலரி மாளி­கையில்  இடம்­பெற்ற ஊடக மாநாட்டில் அவர்  இத்­த­க­வலை வெளி­யிட்டார். 

இதே­வேளை நேற்று சம்­மாந்­துறை மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய குழு­வொன்று அகில இலங்கை  மக்கள்  காங்­கிரஸ்  தலை­வ­ரான முன்னாள் அமைச்சர் ரிசாத் பதி­யு­தீனை அவ­ரது  இல்­லத்தில் சந்­தித்து இஸ்­மா­யிலின் கட்சி தாவல் முயற்சி குறித்து கவலை வெளி­யிட்­டுள்­ளனர். சம்­மாந்­து­றைக்கு  ஒரு பிர­தி­நி­தித்­துவம் வழங்­கப்­பட வேண்டும் என்­ப­தற்­கா­கவே  தேசியப் பட்­டியல் மூலம்  இஸ்­மாயில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்­ட­தையும் அவர்கள் இதன்­போது சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.எம் .இஸ்­மாயில், பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள மஹிந்த ராஜ­பக்ச தரப்­புக்கு ஆத­ர­வ­ளிக்கும் வகையில் கட்சி தாவி அமைச்சுப் பத­வி­யொன்­றினைப் பெற்றுக் கொள்­வ­தற்கும் முயன்ற நிலையில், அம் முயற்சி அகில இலங்கை  மக்கள்   காங்­கி­ர­ஸினால் தடுத்து நிறுத்­தப்­பட்­டமை   குறிப்­பி­டத்­தக்­கது. எனினும் குறித்த சம்பவம் இடம்பெற்ற தினத்திலிருந்து அவர் கட்சியுடன் எந்த தொடர்பையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவரை எந்தவகையிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3 comments:

  1. Mr Rishard Bathiutheen

    It is not that easy to forget the damage and the treachery you have done to SLMC. Late Leader Ashraff had trusted you but you crossed over overnight. You continued to do the same thing to the Nstional parties too.Now how can you blame Dr Ismail for following your path and your own principles. Don't you feel that there is inconsistency in your own practices.

    ReplyDelete
  2. He is a dirty burger and showing his color.

    ReplyDelete
  3. My advice is that we should see reality now - Insha Allah and “ALL MUSLIM MP’S SHOULD SUPPORT HON. MAHINDA RAJAPAKSA IN PARLIAMENT” WHEN PARLIAMENT IS RECONVENED ON NOVEBER 14th., DECEPTIVE AND MUSLIM LEADERS WILL HAVE NO SAY AFTER THE 14th., NOVEMBER, 2018, Insha Allah. The fact remains NOW, the Muslim voters are acting on their own and do NOT wish to be represented by these "MUNAAFIKK and DECEPTIVE POLITICIANS", Insha Allah. It is time up that a NEW POLITICAL FORCE ( a Muslim Democratic Political Party) that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and to support the new government of PM Mahinda Rajapaksa, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.