Header Ads



உலகில் எந்த நாட்டில், ஆளும்கட்சியினர் வெளியேறியுள்ளனர்...?

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று -24- கண்டி நகரில் மக்கள் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.

ஆளும் கட்சியினர் நேற்றைய தினம் சபையிலிருந்து வௌியேறியமை தொடர்பில் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கருத்து தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற அமர்வின்போது எதிர்கட்சியினரே வௌிநடப்பு செய்வார்கள். ஆளும்தரப்பு அல்ல. இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக ஆளும் தரப்பினர் எனக் கூறிக்கொள்ளும் சிலர் அமர்விலிருந்து வௌிநடப்பு செய்தனர். உலகில் எந்த நாட்டில் ஆளும்கட்சியினர் வௌியேறியுள்ளனர். இயலுமானால் கூறுங்கள், ஏன் அவர்கள் வௌியேறினார்கள். அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை, எமக்கு நாள்தோறும் பெரும்பான்மை அதிகரிக்கின்றது. எதிர்வரும் வாரங்களில் மேலும் சிலர் எமது கட்சிக்கு வரவுள்ளார்கள் என்பதை நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.
இந்தப் பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்களும் தமிழ் முற்போக்கு முன்னணியின் மனோ கணேஷன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.