Header Ads



வஸீம் தாஜூதீன் குற்றவாளிகளை அறிந்து வைத்துள்ளோம், நேரம் வரும்போது அம்லப்படுத்துவோம்

எவன்காட் விவகாரம் தொடக்கம் வஸீம் தாஜூதீன் கொலை, ஊடகவிளலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும்  ஊடகவியலாளர் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை போன்ற  சம்பவங்கள் வரையிலான அனைத்து குற்றசெயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை அறிந்துவைத்துள்ளதாகவும் சந்தர்ப்பம் வரும்போது உண்மை தகவல்களை மக்களுக்கு தெளிவுப்படுத்தபோவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்ற இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு  உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் ஊழல் மோசடிகளை விசாரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவை நியமிப்பதாக குறிப்பிட்டுள்ள விடயம் வரவேற்கத்தக்கது. 

ஆகவே இவ் விசாரணைகளுக்கு நாம் எவ்வித தடைகளையும் ஏற்படுத்த மாட்டோம். ஆனால் இந்த விசாரணைகள் அரசியல் பலிவாங்கல்களை அடிப்படையாக கொண்டு அமையக் கூடாது.

மேலும் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ச்சியாக பிரதமர் வேடத்தை கலைத்து பெரும்பான்மைக்கு முன்னுரிமை கொடுத்து பிரச்சினைகளில் இருந்து விலகி செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

3 comments:

  1. நீ அம்பலப்படுத்தியது முழு உலகமும் அறிந்ததே மூடிக்கொண்டு இரு....

    ReplyDelete
  2. இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் "வசீம் தாஜுதீன்" பெயரை சொல்லி இந்த நாட்டு மக்களை ஏமாற்றப் போகின்றீர்கள்?

    இலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராக துவேசம் கக்கும் நூலை எழுதிய முக்கிய நபர் தான் இந்த சிங்கள பெளத்த இனவாதி, மறக்க மாட்டோம்.

    இப்படியெல்லாம் தன்னை அரசியலுக்காக சீரழிப்பார்கள் என்று தெரிந்து இருந்திருந்தால், வசீம் தாஜுதீன் மரணிக்கமலே இருந்திருப்பார். ஒவ்வொரு குற்றவாளியும் மக்களை ஏமாற்ற இப்பொழுது வசீம் தாஜுதீன் பெயரை விற்றுப் பிழைக்கின்றார்கள்.

    ReplyDelete
  3. டேய் பாவம் டா அந்த தாஜூடீன். நீங்கள் தான் அவரை பல முறை கொல்லுகிண்றீர்கள். அவருடைய ஆத்மாவையாவது நிம்மதியாக இருக்க விடுங்கடா.

    ReplyDelete

Powered by Blogger.