Header Ads



சஜித் பிரேமதாசாவை, பிரதமராக்க முயற்சி


ரணில் விக்கிமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என, மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாசாலை பிரதராக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக அறியவருகிறது.

இத்திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பு ஆரம்பித்துள்ள நிலையில் கட்சிக்குள் அதற்கு ஆதரவு நிலையும், எதிர்ப்பும், மௌனமும் தொடருகிறது.

எனினும் ரணில் விக்கிரமசிங்கவின் விருப்புடனே எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ள வேண்டுமென்பதில் சஜித் பிரேமதாசா உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

பலாத்காரமாகவோ அல்லது ஒரு சாராரின் விருப்புடன் மாத்திரமோ பிரதமர் பதவியையோ இல்லையேல் கட்சித் தலைமைப பதவியையோ ஏற்பதில்லை என்ற நிலைப்பாட்டிலும் சஜித்  காணப்படுவதாகவும் ஐ.தே.க. உள்ளக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

2 comments:

  1. Even for Sajith, My3 will not agree. He is demanding all sort of rubbish to delay the process......

    ReplyDelete
  2. This is not the time only Ranil can handle this crisis successfully they must wait till next election

    ReplyDelete

Powered by Blogger.