Header Ads



வதந்திகளுக்கு முஸ்லிம்கள் ஏமாறாது மஹிந்தவுக்கும், மைத்திரிக்கும் ஆதரவளிக்க வேண்டும்

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் சிறு­பான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் மஹிந்த ராஜபக்ஷ தலை­மை­யி­லான கூட்­ட­ணிக்கே ஆத­ரவு வழங்க வேண்டும். பிர­தமர் மஹிந்த ராஜபக்ஷ முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­னவர் என பரப்­பப்­படும் வதந்­தி­க­ளுக்கு ஏமாந்து விடக்­கூ­டாது என முன்னாள் பிர­தி­ய­மைச்­சரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான காதர் மஸ்தான் தெரி­வித்தார்.

சுதந்­திரக் கட்­சியின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது; 

'பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற சம்­ப­வங்­களை இன்று சிலர் ஞாப­க­மூட்டி வரு­கி­றார்கள். அவை ஏதோ சூழ்ச்­சி­க­ளினால் இடம்­பெற்­றவை. இதற்­காக முஸ்லிம் சமூ­கத்­திடம் அவர் கவலை தெரி­வித்­துள்ளார்'. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்­திற்கு தமிழ் முஸ்லிம் சமூகம் பெரும் பங்­க­ளிப்புச் செய்­துள்­ளது. அன்­றைய ஜனா­தி­ப­தி­மீ­தி­ருந்த பீதியே ஆட்சி மாற்­றத்­திற்குக் கார­ண­மாகும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் காலத்­திலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்கள் இடம்­பெற்­றன. இவற்றை ஜனா­தி­பதி முடி­வுக்குக் கொண்டு வந்தார். சிறு­பான்மை மக்­களின் வாக்­கு­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தொடர்ந்தும் சிறு­பான்மை மக்­களின் பாது­கா­வ­ல­னா­கவே கட­மை­யாற்­றுவார்.

தற்­போ­தைய அமைச்­ச­ர­வை­யிலும் முஸ்­லிம்­க­ளுக்கு உரிய பிர­தி­நி­தித்­து­வத்தை ஜனா­தி­பதி வழங்­கி­யுள்ளார்.

தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டு­வ­தற்கு கால­தா­மதம் ஏற்­பட்­டுள்­ளதை நாம் ஏற்­றுக்­கொள்­கிறோம். அர­சியல் தீர்­வுக்­கான அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்கள் கால­தா­ம­த­மா­கி­யுள்­ளன. பல்­ச­மூ­கங்கள் வாழும் ஒரு நாட்­டில் உட­ன­டி­யாக தீர்­மா­னங்­களை எடுக்க முடி­யாது. அதில் கால­தா­மதம் நிச்­ச­ய­மாக ஏற்­படும்.

கடந்த ஆட்­சியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வடக்கு, கிழக்கு பிராந்­தி­யங்­க­ளுக்கே அதி­க­மான விஜ­யங்­களை மேற்­கொண்டு அப்­ப­குதி மக்­களின் பிரச்­சி­னை­களைக் கேட்­ட­றிந்து தீர்­வுகள் பெற்­றுக்­கொ­டுத்­துள்ளார். எனவே தமிழ், முஸ்லிம் சமூகம் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ  தலை­மை­யி­லான கூட்­ட­ணிக்கு தமது ஒரு­மித்த ஆத­ர­வினை வழங்­க­வேண்டும்.

இன்று முஸ்லிம் சமூகம் தமது அர­சியல் தலை­மைத்­து­வங்­களின் மீது நம்­பிக்­கை­யி­ழந்து விட்­டது. அத­னா­லேயே பெரும்­பான்­மை­யானோர் பெரும்­பான்மைக் கட்­சி­களை ஆத­ரிக்­கின்­றனர். முஸ்லிம் சமூகம் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி மீது இன்று கூடுதல் நம்­பிக்கை வைத்­துள்­ளது. அவர்­க­ளது ஆத­ரவு பெரு­கி­வ­ரு­கி­றது. மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முஸ்லிம்கள் வழங்கிய ஒத்துழைப்பு தொடர்ந்தும் இருக்கிறது.

ஜனநாயகத்தைப் பாதுகாத்து ஜனநாயக ரீதியில் ஓர் அரசாங்கத்தை அமைத்துக் கொள்வதற்காகவே ஜனாதிபதி அவருக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தின்படி பாராளுமன்றத்தைக் கலைத்தார். இது தொடர்பிலான தீர்வினை உயர் நீதிமன்றம் வழங்கும் என்றார்.
-Vidivelli

7 comments:

  1. you must be joking. MS and MR are now gone. They made a political suicides. what a joker are you?

    ReplyDelete
  2. 2016 முன் தாங்கள் பூமியில் வாழ்ந்தீரா அல்லது வேற்று கிரகத்தில் வாழ்ந்தீரா? நீங்களும் பைசர் முஸ்தபா ஹிஸ்புல்லா 3 பேரும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமா

    ReplyDelete
  3. Wat the hell r u talking....

    ReplyDelete
  4. Cadermasthan are you in Masthu... I mean did you take drugs... Shame on you culprit...

    ReplyDelete
  5. மறந்தே விட்டோம். நல்லநேரம் முஸ்லிகளின் கண்களை திறந்துவிட்டீர்கள். ஒருவர் ஏமாற்றுக்காரன் மற்றவர் நம்பிக்கை துரோகி.

    ReplyDelete

Powered by Blogger.