November 05, 2018

அன்புக்குரிய முஸ்லிம் மக்களே, என்னை நம்புங்கள் - தமிழில் மஹிந்த

என் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே நான் உங்களிடம் கேட்பது, இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள். நான் உங்களை நம்புகின்றேன். நீங்கள் எப்போதும் என்னை நம்ப வேண்டும். இன்று உங்களுக்கு நல்ல காலம் என தமிழில் உரையாற்றும் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை, பலரது அர்ப்பணிப்புடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தை எக்காரணத்திற்காகவும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

'' மக்கள் மகிமை '' பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்து மக்கள் மத்தியில் உரையாற்றினர்.

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் விதத்தில் பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் உரையாற்றுகையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

அபிவிருத்திக்காவும் மக்களின் நலன்களுக்காகவும் ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து பயணிக்கவுள்ளேன்.

நாட்டின் எதிர்கால குழந்தைகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

நான் ஜனாதிபதியின் இடத்தில் இருந்திருந்தால் இவ்வாறான முடிவொன்றை எடுத்திருக்க மாட்டேன். 

நாம் ஒன்றிணைந்தது நாட்டு நலன்கருதியே. ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் பிள்ளைகளின் உரிமையை விற்க ஆயத்தமானார். அனைத்திற்கும் வரிச் சுமை சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த  3 வருடங்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் கடமையாற்றியதன் பின்னரே ஜனாதிபதி இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை எடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடமையாற்றுவது இலகுவான ஒரு விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.

9 கருத்துரைகள்:

பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் காட்டுங்கள். சமஷ்டியை கொண்டு வாருங்கள் யுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை தண்டியுங்கள். தமிழர் பிரதேசத்தில் பாரபட்சம் இன்றி அபிவிருத்திகளை கொண்டு வாருங்கள். மக்களே உங்களை தேடி வருவார்கள்.

For what ?
Again to kill Muslims

நீ ஜனாதிபதியாகி நாட்டை 2005ம் ஆண்டு பொறுப்பெடுக்கும்போது நாட்டின் கடன் 27000000000 பில்லியன் அமெரிக்க டொலர் 2014 கடைசியில் உன்னை ஆட்சியிலிருந்து மக்கள் விரட்டியபோது நாட்டின் கடன் 54000000000 பில்லியன் டொலர் சுமார் ஒவ்வொருவருடமும் 3000000000 மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெருமதியை நீயும் உனது கள்ளக்க்கூட்த்தாறும் ஆட்டையை போட்டுவிட்டு குஷியாக வாழ்ந்தீர்கள் தற்பொழுது நாட்டுமக்களை பெரும் கடனாளியாக ஆக்கிவிட்டாய் மீண்டும் நாட்டை நாசமாக்கவருவதற்கு முயற்சிக்கின்றாய் உனக்கே நல்லாயிருக்கா பௌத்த மத்த்தில் நாளை மறுமையில் கேள்விகள் உண்டு என்ற எச்சரிக்கைகள் இல்லையா?

yes sir you had done great we hope you learn well in past we are with you we trust you as a muslim we belive your words

@ Ajan, don't dream much - he won't punish war heroes, no federal government, and even if he tries to develop NE, your politicians will not allow that to happen. So just don't waste your time dreaming..

Ghaouse சார், இதுக்கு தான் சொல்லுரது, கொஞ்சம் தண்ணியுங்க என்று.

In sha allah we will with you sir

We demand Thajudeen killers to brought to face the justice

Post a Comment