Header Ads



மகிந்த அணியின் மானம் போகுது, வெளிநாடுகளை சந்தித்துவிட்டு இரகசியம் பேணுமாறு கூறினார்களாம் - அம்பலமாக்கும் ஜேர்மன் தூதுவர்

இலங்கையில் பணியாற்றும்  இராஜதந்திரிகளிற்கு  எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரொஹ்டே  கவலை வெளியிட்டுள்ளார்.

கனடாவின் உயர்ஸ்தானிகரிற்கு எதிராகவும்  வெளிநாட்டு இராஜதந்திரிகளிற்கு எதிராகவும் ஏன் தேவையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என அவர் தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை நாங்கள் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நான்கு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தோம் என ஜேர்மனியின்  தூதுவர் தெரிவித்துள்ளார்

அவர்களின் வேண்டுகோளின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது அவர்கள் இந்த சந்திப்பு குறித்து இரகசிய தன்மையை பேணுமாறு கேட்டுக்கொண்டதால் நாங்கள் இதனை பகிரங்கப்படுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பின்னர் எங்களை சந்திப்பதற்கான அழைப்பை தமிழ்தேசிய கூட்டமைப்பும் விடுத்திருந்தது என குறிப்பிட்டுள்ள ஜேர்மன் தூதுவர் நாங்கள் ஜனாதிபதி  சபாநாயகர் உட்பட அனைத்துர தரப்பினரையும் சந்தித்துள்ளோம்  அனைவரையும் செவிமடுப்பதே எங்கள் பணி எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.