Header Ads



சவூதி இளவரசர், காலித் பின் தலால் விடுதலை…

சுமார் ஒரு வருட சிறைவாசத்துக்கு பின்னர் சவூதி இளவரசர் காலித் பின் தலால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மன்னர் சல்மான் ஊழலை தடுப்பதற்காக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுக்கு ஊழல் தடுப்பு வழக்குகளில் விசாரணை நடத்தவும், கைது ஆணைகளை பிறப்பிக்கவும், பயண தடை விதிக்கவும், நிதி பரிமாற்றங்களை தடுக்கவும், வங்கி கணக்குகளை முடக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த குழு உடனடியாக அங்கு பல இளவரசர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. அப்படி சிறையில் அடைக்கப்பட்ட இளவரசர்களில் ஒருவரான காலித் பின் தலால். சிறையில் அடைக்கப்பட்டு சுமார் ஓராண்டு ஆன நிலையில் இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலையால், சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரச குடும்பத்தின் ஆதரவினை முழுமையாகப் பெறுகிற விதத்தில்தான் இப்போது இளவரசர் காலித் பின் தலால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர் கைது செய்யப்பட்டபோதும், இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளபோதும் அதற்கான காரணத்தை சவூதி அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

2 comments:

  1. மன்னன் சல்மானின் மகன் தற்போதைய முடிக்குரிய இளவரசர் ஒரு கொலை வெறிபிடித்த ஓ நாய்

    ReplyDelete
  2. இவரின் பெயர் வலீத் பின் தலால் . காலித் பின் தலால் அல்ல

    ReplyDelete

Powered by Blogger.