Header Ads



கட்சித் தலைவர்களுடன் மைத்திரி கண்ட உடன்பாடும், வழங்கிய உறுதிமொழியும் இதோ...!!

பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை வெற்றிகாரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

அதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரண்டு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

முதலாவதாக பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் தான் நடந்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழப்ப நிலை தொடர்பில் அதிருப்தியையும், கண்டனத்தையும் வெளியிட்டிருந்தார்.

அத்துடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவோருக்கு ஆட்சி வழங்கப்படும் என்றும் நாடு இன்னும் ஓரிரு தினங்களில் வழமைக்கு திரும்பும் எனவும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதன்போது மற்றுமொரு விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது அந்த விடயத்தை என்னால் பகிரங்கமாக தற்போது வெளியிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியூதீன் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காண்பது குறித்து இந்த கூட்டத்தின் கலந்துரையாடப்பட்டதாக ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்ததுடன், புதிய பிரதமர் தொடர்பில் எதுவும் கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தமை  குறிப்பிடத்தக்கது.

2
Ramasamy Sivarajah

பாராளுமன்றத்தின் சிறப்புரிமையை தாம் மதிப்பதாக இன்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடந்த விதம் குறித்தும் அதன் அடிப்படை குறித்தும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்...
“ எனவே மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் புதிதாக சமர்ப்பித்து அதனை ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்து - சபையில் விவாதிக்க தினம் ஒதுக்க வேண்டிய செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி செய்ய வேண்டும்”
“அல்லது அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் - அரசை அரசை அமைக்க ஆதரவாக இருக்கும் பெரும்பான்மை எம் பிக்களின் ஆதரவு சபையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்”
என்ற உடன்பாடு இன்றைய சந்திப்பில் எட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது..
பிரச்சினைகளுக்கு ஓரிரு தினங்களில் தீர்வை காணவும் அதுவரை நாடாளுமன்றை ஒத்திவைக்கவோ அல்லது வேறெந்த நடவடிக்கைகளையோ எடுக்கப்போவதில்லையெனவும் இங்கு ஜனாதிபதி உறுதி அளித்திருப்பதாக தகவல்..!

1 comment:

  1. My3 wanted JVP to remove one of the items against My3 in the No Confidence Motion.

    ReplyDelete

Powered by Blogger.