Header Ads



இராஜினாமா செய்தார் விக்னேஸ்வரன்

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு கடிதமொன்றை வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி அலுவலகத்திற்கு நேற்று வந்த அவர் இந்த கடிதத்தை தனக்கு வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா  தெரிவித்தார்.

கடிதத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் முதலமைச்சருக்கு இடையில் சுமார் ஒரு மணிநேரம் நட்பு ரீதியான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது , தான் உருவாக்கிய கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

2 comments:

  1. தற்போதைய சூழ்நிலையில் ஆளுக்கொறு கட்சி அமைப்பது ஆரோக்கியமில்லை.

    ReplyDelete
  2. Hello Vicky,please go and rest and you are not suitable for politics. You wasted last 5 years and created unnecessary division among Tamil people. You all talking and passing resolutions only. Nobody knows what are those useless resolutions. Please pack your things and go to your Colombo home and rest.

    ReplyDelete

Powered by Blogger.