இலங்கை முஸ்லிம்கள் மீதான, வன்முறைக்கு பேஸ்புக்கும் காரணம் - தவறையும் ஒப்புக்கொண்டது
இலங்கையின் கண்டி மாவட்டத்தில் இன வன்முறைகள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த, தாங்கள் தவறிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
லண்டனில் நடைபெற்ற போலிச் செய்திகள் தொடர்பிலான சர்வதேச விசாரணை ஒன்றின்போது, முகப்புத்தக நிறுவனத்தின் கொள்கை தீர்வு விவகாரங்களுக்குப் பொறுப்பான துணைத் தலைவர் ரிச்சர்ட் அலன் இந்த தவறினை ஒப்புக் கொண்டுள்ளார்.
இலங்கையில் இனவாதத்தை தூண்டும் விதமான முகப்புத்தக பதிவுகளை நீக்காதது தங்களது நிறுவன நியதிகளுக்கு முரணான ஒரு பாரதூரமான தவறாகுமென அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சிங்கப்பூரின் பாராளுமன்ற உறுப்பினர் எட்வின் தொங் கேள்வி எழுப்பியிருந்தார்.
சிங்களத்தில் பரவிய இனவாதத்தை தூண்டும் முகப்புத்தக பதிவுகளின் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இவை உங்களது நிறுவனத்தின் நியதிகளுக்குப் புறம்பானது அல்லவா என எட்வின் எழுப்பிய கேள்விக்கு, ரிச்சர் அலன் ´ஆம்’ என பதிலளித்து ஒப்புக் கொண்டுள்ளார்.
இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களுக்கு இடையில் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான முகப்புத்தக பதிவுகள் பரவியதனால் பல உயிரிழப்புக்களும், உடமைச் சேதங்களும் ஏற்பட்டதாக எட்வின் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான பதிவுகளினால் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனால் இலங்கையில் முகப்புத்தகம் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டு இறுதியில் அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த முகப்புத்தக பதிவுகளை நீக்குமாறு, அப்போதிருந்த இலங்கை தொலைதொடர்பு அமைச்சர் வேண்டிக்கொண்ட போதிலும் பதிவுகள் நீக்கப்படாமைக்கான காரணம் என்ன என அவர் வினவியுள்ளார். அதற்கு முகப்புத்தக பணியாளர் ஒருவரின் கவனயீனமே இதற்கான காரணம் என ரிச்சர்ட் அலன் பதிலளித்துள்ளார்.
-Vidivelli
ALHAMDULILLA.
ReplyDeleteThe Muslims of Digana should file a "CIVIL LAW SUIT" or a "MASS TORT LOTIGATION and MULTI-DISTRICT LITIGATION" ("MDL") action against the "FACEBOOK Company for 1 (One) Billion US dollars, immediately, Insha Allah. Will some proactive Muslim lawyer move this matter seriously, Insha Allah. Maybe Attorney - at - Law and PC Ali Sabri can move on this matter, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".
அந்த பாதிப்புக்களுக்கு பேஸ்புக் என்ன நிவாரணம் வழங்கும்?
ReplyDelete