Header Ads



'பொய் சொல்ல வேண்டாம்' என தேரரின் உரைக்கு இடையூறு - மேசையில் அடித்து கூச்சல்

இடைக்கால அரசாங்கம் அமைத்து இரண்டு கட்சிகளுக்கும் அதிகாரங்களை பகிர்ந்துகொண்டு தேர்தலுக்கு செல்லவேண்டும் என்ற  பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரின் கருத்துக்கு பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் சபையில் கூச்சலிட்டு கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

அரசியல் நெருக்கடி தொடர்பில் இன்று பாராளுமன்ற அமர்வில் ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், உரையாற்றும்போது, ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் அந்த கருத்துக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மேசையில் அடித்து கூச்சலிட்டனர். 

இதன்போது சபையில் ஆரம்ப வரிசையில் இருந்த மனோ கணேசன், ராஜித்த சேனாரத்ன மற்றும் சிலர் அவர்களை அமைதிப்படுத்தி தேரருக்கு தொடர்ந்து உரையாற்ற நடவடிக்கை எடுத்தனர். 

அத்துடன் தேரர் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட சிங்கப்பூர் ஒப்பந்தத்தின் சில உள்ளடக்கங்களை தெரிவித்தபோது, ஐக்கிய தேசிய கட்சி சுஜீவ சேனசிங்க, ஹர்ஷடி சில்வா போன்றவர்கள் பொய் சொல்லவேண்டாம் என தெரிவித்து தொடர்ந்து தேரரின் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

No comments

Powered by Blogger.