Header Ads



யாழ் முஸ்லீம் பகுதி, வேலைத்திட்டத்தில் புறக்கணிப்பு - வரவுசெலவு திட்டத்தை எதிர்க்கப்போகும் நிலாம்

-பாறுக் ஷிஹான்-

யாழ் மாநகரின் புதிய ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு எதிராக செயற்படவுள்ளதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தினங்களில் நிறைவேற்றப்படவுள்ள புதிய வரவு செலவு திட்டம் தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

யாழ் மாநகரின் புதிய ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதம் இடம்பெற்று வருகிறது.வாக்கெடுப்பில் நான் கலந்து கொள்வது குறித்து பரிசீலனை செய்கின்றேன்.காரணம் மாநகர சபை மக்கள்  விரோத செயற்பாடு ஆகும்.இது தவிர மக்களிற்கான நலனில் அக்கறை செலுத்தாமல் தன்னிச்சையான செயலில்  முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையிலான அணி செயற்படுவதை காண முடிகிறது.

இதற்கு உதாரணமாக   யாழ் மாநகரசபைக்கு முதல்வர் நிதியம் முறையற்ற வகையில் உருவாக்கப்படுவதாக சபையில்  ஈ.பி.டி.பி கட்சியினர் குற்றஞ்சாட்டுவதை குறிப்பிட முடியும்.

நானும் இந்த நிதியத்திற்கான  முன்மொழிவிற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுவேன்.மக்களின் பணம் வீணாக செல்ல இடமளிக்க முடியாது.அது மாத்திரணமன்றி யாழ் முஸ்லீம் பகுதிகளில் உட்கட்டுமான வேலைத்திட்டத்தில் புறக்கணிப்பு தொடர்கதையாகவே உள்ளது.

சபையின் வரையறைக்குள் அடங்கும் எந்த வேலைத்திட்டங்களுக்கும்  சபையின் நிதிக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் நடவடிக்கை மேற்கொண்டால் எனது முழு பங்களிப்பையும் வழங்குவேன்.இல்லாவிடின்  ஒத்துழைப்பு என்னால் வழங்க முடியாது.அத்துடன்  மாநகரசபைக்கு முறையற்ற வகையில் நியமனங்கள்  சிபார்சு செய்யப்படுகிறது தொடர்பில் சபையில் பலரால் சுட்டிக்காட்ட்பட்டது.இதற்கான பொறுப்புள்ள பதிலை சம்மந்தப்பட்டவர்கள் வழங்க வேண்டும். சில தனிப்பட்ட சுயநலன்களுக்கானதாக சபை  நடாத்தி செல்வதை அனுமதிக்க மாட்டேன்.என கூறினார்.

இதனிடையே முதல்வரது வெளிநாட்டு போக்குவரத்து  தேவைகளுக்காக ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கிடு செய்வதற்கான பிரேரணை ஒன்றும் சபையின் பாதீட்டில் முன்மொழியப்பட்டது. குறித்த முன்மொழிவையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.