November 25, 2018

கல்முனை மேயருக்கு, கிழக்கு மாகாண எல்லாளன் குழு எச்சரிக்கை


எந்த ஓர் இஸ்லாமிய இனவாதியும் செய்திராத வரலாற்றுக் காழ்ப்புணர்ச்சியின் உச்சக்கட்டம்.கல்முனை மாநகர. மேயரால் தமிழ்பிரதேசங்களைக் குறிவைத்து கட்டவிழ்த்தப்படுகிறது.

கடந்த நான்கு தினங்களுக்குமுன்னர் கல்முனை மாநகரசபை எல்லைகளுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில் குப்பைகளை சேகரிக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பித்த மேயர் ரக்கீப்!

மடுவத்தை மருதமுனை வைத்தியசாலைகளில் மூன்றுதினங்களுக்கு முன்னர் குப்பைகள் கல்முனை மாநகரசபை வாகனம்கொண்டு சுத்தப்படுத்தப்பட்டதை எம்பார்வையில் சிக்கியுள்ளது.

வக்கீல் ரக்கீப் தன்னை ஓர் இனவாதியாக மக்கள்முன் சிலையாக வடிப்பது முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லதோர் அபிப்பிராயத்தையும் பார்வையையும் திருப்பி எதிர்வரும் மாகாண மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் களமிறங்கி வெற்றிகொள்ள ஓர் இனம்மீதான எளிய வன்முறையினை திணிப்பது எவ்வளவு தூரத்திற்கு உங்களையும் வக்கிரப்புத்தியையும் முஸ்லிம்மக்களுக்கே வெளிச்சமாய் தோலுரித்து நிற்பதை அவர் அறியவில்லை.

மர்ஹும் M.H.A.Mஅஷ்ரப் அவர்கள் பிறந்த பூமியில் இப்படி ஒரு அவமானதம். அவரின் அரசியல் சந்திரிக்காவின் ஆட்சியிலேதான் உச்சக்கட்டம் பெற்றது. தோழோடு தோழ்நின்றவர்களும் அவரோடு இறந்தவர்களும் தமிழர்களே.

முஸ்லிம் காங்றஸ் கிழக்கில் வளர்ச்சி கண்டது முற்றுமுழுதாக தமிழர்களின் கையோடுதான் என்ற உரை அட்டாளச்சேனை கல்விக்கல்லூரியில் மீலாதுன்நபி விழாவும் முஸ்லிம் கிராம மற்றும் சந்தை திறப்புவிழா உரையின்போது கூறியதை நாம் எவரும் மறக்கமாட்டோம்.

இவ்வாறு பிற இனத்தானையும் அனுசரித்து அரசியலில் வெற்றி பெற்றவர் அவர். ஆனால் இந்த மேயர் ரக்கீப் குரங்கிட கையில் பூ மாலையைக் கொடுத்தாற் போல் அதிகாரத்தை இவ்வாறு துஷ்பிரயோகம் செய்வதானது எதிர்காலத்தில் ஹிஸ்புல்லா அவர்கள் !

நானே மாட்டு மாக்கட் கட்டினேன் இந்துக் கோயிலை இடித்தேன் என்றபாணியில் நானே நகரசபை கோயிலை இடித்தேன் குப்பைகளைக் கொட்டினேன் என பிரச்சார ஆயுதமாக கையில்தூக்க இவ்வாறான மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை கையாள முயல்வது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்றஸ் ன் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் என்பதை என் அன்பின் இஸ்லாமிய சகோதரங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

திண்ட சோற்றில் துரோகம் செய்யச்சொல்லி புனித குர்ரானில் எந்தப்பக்கத்திலுமில்லை. இஸ்லாமியத்தலைவர்கள் நடுநிலையானவர்கள்.பயபக்தியும் கடவுள்மீதான பயமும் அன்பும் மிக்கவர்கள்.

இன மத மொழி வேறுபாடின்றி கஃபா தொழுகை செய்வோர் எல்லோரையும் ஒருகுடையின்கீழ் பார்க்க தவறமாட்டார்கள்.

என் அன்பிற்கினிய கல்முனை நீதிமன்ற சட்டப் பிதாவே இதர சட்டத்தரணிகளே இந்த மேயர் ரக்கீப்பின் பாராதூரமான இனவாதச்செயல்களை எப்போது காண்பீர்கள்.

பிரபலங்களுக்கு ஓர்கீறல் விழுந்தால் குரல்கொடுக்கும் ஊடகம் எம்தமிழர்களுக்கு இந்த இனவாதியால் இழைக்கப்படும் அநீதிகளை கண்டுகொள்ளாமலிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.

சட்டத்தரணிகள் மற்றும் தமிழ் உயர்அதிகாரிகள் இவரின் இந்த இனவாதச் செயலிற்கு எதிராக மிகவிரைவில நல்லதோர் முடிவை பெற வேண்டுமென கிழக்குமாகாண எல்லாளன் குழுமம் விநயமாக வேண்டுகிறது.

2 கருத்துரைகள்:

இந்த தமிழ் பயங்கரவாதிகளுக்கு எந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தான் இனவாதிகளாக தென்படவில்லை? என்றுமே பொறாமையில் அழிந்து நாசமாகிப்போகாமல் சுயமாக முன்னேற வழியை தேடுங்கள்

My dearest friend mayor Mr.Rakeeb never do such a stupid work

Post a Comment