Header Ads



ரணிலை நீக்கிவிட்டு, சஜித்தை பிரதமராக்கி தேசிய அரசமைக்க முயற்சி, ஜனாதிபதிபதியுடன் ராஜித ஜோன் இரகசிய பேச்சு - கொழும்பு டெலிகிராவ் தகவல்

முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரட்ணவும் ஜோன் அமரதுங்கவும் ரணில் விக்கிரமசிங்க இல்லாத அரசாங்கமொன்றை ஏற்படுத்துவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசியப்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின் தலைமையில் ஆட்சியமைக்கும் முயற்சிகளிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சிறிசேன தனது அடுத்த கட்ட திட்டத்தை முன்னெடுத்துள்ளார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொது எதிரணியில் ஒரு பகுதியினர் மற்றும் ஐக்கியதேசிய கட்சியினரை உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சிறிசேன முயல்கின்றார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

ராஜிதசேனாரட்ணவும் ஜோன் அமரதுங்கவும் நேற்று சிறிசேனவை சந்தித்து இரகசிய பேச்சுவார்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக புதிய தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து  அவர்கள் ஆராய்ந்துள்ளனர்.

ஒவ்வொரு கட்சியை சேர்ந்தவர்களுக்கும் சமமான அமைச்சரவை ஆசனங்களை ஒதுக்குவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

ரணில் விக்கிரமசிங்கவை தவிர வேறு எந்த ஐக்கியதேசிய கட்சியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினரையும் பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்கு சிறிசேன இணங்கியுள்ளார்.

சஜித் பிரேமதாசாவிற்கு பிரதமர் பதவியை வழங்கதயார் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார் என கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது.

5 comments:

  1. அப்படி நடந்தால் ராஜித, சம்பிக்க எல்லோருக்கும் மைத்ரி மீண்டும் நல்ல மனுசன் ஆகிடுவாரா?

    போன பஸ்சுக்கு கைகாட்டி வேலை இல்லை. தேர்தல் வரத்தான் போகிறது, மஹிந்த வெல்லத்தான் போகிறான். இவங்களின் குப்பை திட்டங்களால் இப்பொழுது பலனில்லை.

    ReplyDelete
  2. Why MY3 Did not go to this choice from the beginning ? Since he had problem MR and now with RNl,,, he should have given this option form time when he wanted this change.

    All Drama... ONLY God can protect the people of this land but not any of this MY3, MR or RNl.

    ReplyDelete
  3. இனிமேல் ஆட்சியை மகிந்தவிடம் இருந்து பிடுங்குவது இலகுவில் நடக்கப் போவதில்லை.

    ReplyDelete
  4. இரகசிய பேச்சில் நடந்த விடயங்களையும் சொல்லிவிட்டார்கள்.

    அப்போ பரகசிய விடயங்களுக்கு எப்படி தலைப்பு இடலாம்.

    ReplyDelete

Powered by Blogger.