Header Ads



சவூதி அரேபியாவின் முதலாவது, அணு உலைத் திட்டம் ஆரம்­பம்

சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ர­ச­ரினால் அந் நாட்டின் முத­லா­வது அணு ஆராய்ச்சி உலைத் திட்டம் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­ட­தாக சவூதி அரே­பிய ஊடக முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது. 

எம்.பீ.எஸ். என அறி­யப்­படும் சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மா­னினால் புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி, அணு சக்தி, நீர் சுத்­தி­க­ரிப்பு, பாரம்­ப­ரிய மருத்­துவம் மற்றும் விமான உற்­பத்திக் கைத்­தொழில் போன்ற ஏழு முக்­கிய திட்­டங்கள் விஞ்­ஞான மற்றும் தொழில்­நுட்­பத்­திற்­கான மன்னர் அப்துல் அஸீஸ் நக­ரத்­திற்கு கடந்த திங்­கட்­கி­ழமை மேற்­கொண்ட விஜ­யத்­தின்­போது ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டன. 

ஆரம்­பித்து வைக்­கப்­பட்ட திட்­டங்­களுள் அணு ஆராய்ச்சி உலைத் திட்­டமும் விமான கட்­ட­மைப்பு அபி­வி­ருத்­திக்­கான மத்­திய நிலை­யமும் மிக முக்­கி­ய­மான திட்­டங்­க­ளாகும். 

ஈரான் தனது கொள்­கையில் தொடர்ந்து பய­ணிக்­கு­மானால் அணு­வா­யு­தங்­களை உற்­பத்தி செய்­வ­தற்கு தனது நாடும் தயா­ராக இருப்­ப­தாக கடந்த மார்ச் மாதம் சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் தெரி­வித்­தி­ருந்தார். 

அணு­வா­யு­தங்­களை வைத்­தி­ருக்க வேண்­டிய தேவை சவூதி அரே­பி­யா­வுக்கு இல்லை எனினும், ஈரான் அணு­வா­யு­தங்­களை உற்­பத்தி செய்தால் நாமும் அதற்­கேற்ற நட­வ­டிக்­கை­களை மிக விரைவில் மேற்­கொள்வோம் என நேர்­காணல் ஒன்­றின்­போது இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மான் தெரி­வித்­தி­ருந்தார். 

2015 ஆம் ஆண்டு ஈரா­னுடன் செய்து கொண்ட முக்­கி­யத்­து­வம்­வாய்ந்த உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து வில­கிக்­கொண்ட அமெ­ரிக்கா கடந்த திங்­கட்­கி­ழமை தொடக்கம் ஈரா­னுக்கு எதி­ரான எண்ணெய் மற்றும் பொரு­ளா­தாரத் தடை­களை மீள விதித்­தது. 

சவூதி அரே­பிய அர­சாங்கம் தனது சக்தி தேவை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக இரண்டு அணு உலை­களை நிர்­மா­ணிப்­ப­தற்­கான முன்­மொ­ழி­வு­களைக் கடந்த வருடம் கோரி­யி­ருந்­த­தாக சர்­வ­தேச அணு­சக்தி முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது. 

சவூதி அரே­பிய அர­சாங்கம் 2032 ஆம் ஆண்­ட­ளவில் 17.6 ஜிகாவோட்ஸ் அணு­சக்தி கொள்­ள­ள­வினை கொண்­டி­ருக்க எதிர்­பார்த்­துள்­ளது. இந்த அளவு சுமார் 17 அணு உலை­க­ளுக்கு சம­மா­ன­தாகும். அது உல­கி­லேயே மிகப் பெரும் திட்­ட­மாக அமையும். 

உள்­நாட்­டுக்குத் தேவை­யான மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்­வ­தற்குப் பயன்­ப­டுத்­தப்­படும் மசகு எண்­ணெயின் அள­வினைக் குறைத்து அவற்றுள் பெரும்­பா­லா­ன­வற்றை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்­வ­தற்கு சவூதி அரே­பிய அரசு திட்­ட­மிட்­டுள்­ள­தாக சர்­வ­தேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுமானால் அணுசக்தித் திட்டத்தை ஆரம்பித்த இரண்டாவது வளைகுடா நாடாக சவூதி அரேபியா மாறும். 

தென்கொரியாவின் வடிவமைப்பில் உருவான நான்கு அணு உலைகளை ஏலவே ஐக்கிய அரபு அமீரகம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.