Header Ads



அமெரிக்காவின் பொருளாதார, தடையை உடைப்போம் - ஈரான் சவால்

ஈரான் நாட்டின் மீது அமெரிக்க விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை பெருமையாக உடைப்போம் என அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

கடந்த 2ஆம் திகதி பொருளாதாரத் தடைகள் காத்திருக்கின்றன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன்படி, ஈரான் மீதான பொருளாதார தடை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை எதிர்த்து ஈரானில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அங்குள்ள அமெரிக்க தூதரகம் முன்பு கூடிய ஆயிரக்கணக்கானோர், அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி இந்த தடையை உடைப்போம் என பேட்டியளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘அமெரிக்கா பொருளாதாரத் தடையைப் பயன்படுத்தி, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பூச்சியமாக மாற்ற எண்ணுகிறது. ஆனால், நாங்கள் அமெரிக்காவின் தடையைப் பெருமையாக உடைத்து, கச்சா எண்ணெயை தொடர்ந்து ஏற்றுமதி செய்வோம்.

அமெரிக்க வரலாற்றிலேயே வெள்ளை மாளிகையில் நுழைந்த நபர் ஒருவர், சட்டம் மற்றும் சர்வதேச பேச்சுவார்த்தைகளை மீறுவார் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த பொருளாதாரத் தடைக்கு பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஈரானுடனான வர்த்தகத்தை டொலர் இன்றி வேறு விதமான பணப்பரிமாற்றத்துடன் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்துள்ளன.

2 comments:

  1. There are still good decision makers available in the world. They are the protectors of democracy in the world.

    ReplyDelete

Powered by Blogger.