Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு, பாதிப்பு ஏற்பட இடமளியோம் - இஸ்லாமிய நாட்டுத் தூதுவர்கள் திட்டவட்டமாக அறிவிப்பு

-ARA.Fareel-

அர­சியல் நெருக்­க­டி­மிக்க இன்றைய சூழ்­நி­லையில் முஸ்லிம் சமூ­கத்தின் நலன்­க­ளுக்கு பாதிப்­புகள் ஏற்­பட ஒரு­போதும் இட­ம­ளிக்கப் போவ­தில்லை எனவும் அது தொடர்பில் தாம் மிகுந்த அவ­தா­னத்­துடன் இருப்­ப­தா­கவும்  முஸ்லிம் நாடு­களின் தூது­வர்கள் தெரி­வித்­துள்­ளனர். அத்­துடன்

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒற்­று­மை­யாக இருந்து  தங்கள் சமூ­கத்தின் நலன்­க­ரு­திய தீர்­மா­னங்­களை மேற்­கொள்­ளு­மாறும் தூது­வர்கள் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்­ளனர்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் கொழும்­பி­லுள்ள முஸ்லிம் நாடு­களின் தூது­வர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பு ஒன்று நேற்றுக் காலை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். பௌஸியின் தலை­மையில் அவ­ரது இல்­லத்தில் நடை­பெற்­றது.

இதன்­போது முஸ்லிம் நாடு­களின் தூது­வர்­க­ளுக்கு, இலங்­கையின் அர­சியல் கள நிலை­மைகள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது.  இச் சந்­திப்பில் சவூதி அரே­பி­யாவைத் தவிர ஏனைய முஸ்லிம் நாடு­களின் தூது­வர்கள் பங்கு கொண்­டி­ருந்­தனர்.

முஸ்லிம் கட்­சிகள் சார்பில்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அலி சாஹிர் மௌலானா, ஏ.எல்.எம். நசீர், எம்.ஐ.எம். மன்சூர் ஆகி­யோரும் அகில இலங்கை மக்கள் கங்­கிரஸ் சார்பில் அதன் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் மற்றும் அக்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அமீர் அலி, ஏ. ஆர் இஸாக், எஸ்.எம். இஸ்­மாயில் ஆகி­யோரும் பங்­கேற்­றனர்.

குறித்த சந்­திப்பில் கருத்து வெளி­யி­டும்­போதே முஸ்லிம் நாடு­களின் தூது­வர்கள் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளனர்.

இதே­வேளை, இலங்கை அர­சி­யலில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட அதி­ரடி மாற்­றங்கள் மற்றும் அதனால் ஏற்­பட்ட விளை­வுகள் தொடர்பில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் முஸ்லிம் நாடு­களின் தூது­வர்­க­ளிடம் விளக்­க­ம­ளித்­தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இலங்­கையின் அர­சி­யலில் உரு­வா­கி­யுள்ள ஸ்திர­மற்ற நிலை­மைகள் தொடர்பில் தூது­வர்­க­ளுக்கு விளக்­க­ம­ளித்தார். நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது முதல் அண்­மைக்­கால அர­சியல் நிலை­மைகள் குறித்து தூது­வர்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டன.

ஜனா­தி­பதி கடந்த மாதம் 26 ஆம் திகதி பிர­த­ம­ராகப் பதவி வகித்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பதவி விலக்­கி­யமை, மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக நிய­மித்­தமை, அதற்குப் பின்­ன­ரான ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கைகள் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டன.

அர­சுக்கு எதி­ராகக் கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­க­ளின்­போது பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளையும் ரவூப் ஹக்கீம் விளக்கினார்.

ஜனாதிபதி நாட்டின் அரசியலமைப்புக்கு முரணாகவே தீர்மானங்களை முன்னெடுத்துள் ளதாகவும் முஸ்லிம் சமூகம் நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் இதன்போது முஸ்லிம் எம்.பி.க்கள் தரப்பில் உறுதியளிக் கப்பட்டது.
-Vidivelli

5 comments:

  1. அழுத்கம, கண்டி கலவரங்களின் பொழுது இவர்கள் என்ன செய்தார்கள்? இப்பொழுது இலங்கையில் இருப்பது பாராளுமன்ற அரசியல் மற்றும் சட்டப் பிரச்சினை. இப்படியான சந்தர்ப்பத்தில் இந்த இஸ்லாமிய நாட்டுத் தூதர்கள் கருத்து சொல்ல என்ன தேவை?
    இவர்கள் ஒரு ஆணியையும் புடுங்கத் தேவையில்லை.

    இஸ்லாமிய நாடுகள் ஒன்றும் கிழிக்கப் போவதில்லை, பாலஸ்தீன, யேமன் முஸ்லிம்களுக்கு ஒன்றுமே செய்யாத இவர்கள்தான் நமக்கு உதவப் போகின்றார்களா? இவர்கள் இப்படி சொல்வதால் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இனத்துவேசம் வளருமே தவிர ஒரு நன்மையையும் நடக்கப் போவதில்லை. இலங்கை முஸ்லிம்கள் இலங்கைக்கு சொந்தமானவர்கள் அல்ல, வெளிநாட்டில் இருந்து வந்தவர்ககுள் என்ற கருத்துத்தான் இதனால் ஏற்படப் போகின்றது. சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுக்காமல் இருந்தாலே போதும்.

    இலங்கை முஸ்லிம்கள் இதையெல்லாம் நம்பி ஏமாந்து விடக் கூடாது. பாலஸ்தீன, மியன்மாரிய முஸ்லிம்களுக்கு உதவாத இவர்கள்தான் நமக்கு உதவப் போகின்றார்களாம், நம்புங்க மக்களே.

    ReplyDelete
  2. எல்லாம் சரி, பௌசியை எப்படி நம்புவது,

    ReplyDelete
  3. Negative comments above tell me what's your solution?
    Describe your self and what are your thoughts and what have you done so far in your life to srilanka and your community?
    As always finding faults on people.
    Change your self first.

    ReplyDelete
  4. Noor Nizam,
    You are using too many Insha Allahs in your statement. One Inshalla to cover the entire statement would have been sufficient.

    ReplyDelete

Powered by Blogger.