Header Ads



இரத்தம் ஓட, பாராளுமன்றிலிருந்து வெளியேறிய திலும் அமுனுகம - வைத்தியசாலையில் அனுமதி

பாராளுமன்றம் இன்று -15-  காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்ற ஆரம்பிக்கும்போது சபையில் அமிளிதுமளி ஏற்பட்டது.

இதன்போது ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி நகர்ந்தனர்.

அவ்வேளை சபாநாயகரை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்களும் படைக்கல சேவியர்களும் அவ்விடத்தில் குவிந்தனர்.

இதனிடையே கண்டி மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் திலும் அமுனுகம சபாநாயகரின் ஒலிவாங்கியை முறித்த நிலையில் அவரது கையில் காயமடைந்து இரத்தம் ஒழுக சபா பீடத்திலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த எம்.பி. தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

5 comments:

  1. MR & MS they need this....terrorist group

    ReplyDelete
  2. No crime for breaking public properties ?

    ReplyDelete
  3. சனநாயகத்தை முறிக்க முயற்சி செய்த அவனது கையும் நிரந்தரமாக முறியட்டும் என ஜனநாயத்தை நம்பி வாழும் மக்கள் சார்பாக நிந்தனை செய்கின்றோம்.

    ReplyDelete
  4. Bro; they can even Kill each other; Law enforcement is not applicable in the Parliament.

    ReplyDelete
  5. What is this Culprit Qualification... Here after never VOTE for Uneducated Tough's...
    We have to save our COUNTRY from Unqualified POLITICIANS.

    ReplyDelete

Powered by Blogger.