Header Ads



ரணிலுக்கு பயந்து நான், பிரதமர் பதவியை நிராகரிக்கவில்லை - சிறிசேன பிரதமர் பதவியை ஏற்ககோரியது உண்மைதான்


ஜனாதிபதி சிறிசேன  தன்னை பிரதமராக்குவதற்கு முன்வந்தது உண்மை என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில்   செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் சஜித்பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.

எனினும்; கொள்கை அடிப்படையில் சிறிசேனவின் இந்த வேண்டுகோளை நான் நிராகரித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பயந்து இதனை நிராகரிக்கவில்லை மாறாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வது கொள்கை அடிப்படையில் சிறந்த விடயமல்ல என நான்க கருதினேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேசிய பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கா ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து செயற்படவேண்டும் என்பதே அவ்வேளை எனது நோக்கமாகயிருந்தது எனவும் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை இடம்பெற்ற பேரணியில் ஜனாதிபதி சிறிசேன  தான் சஜித்பிரேமதாசவிற்கும் கருஜெயசூரியவிற்கும் பிரதமர் பதவியை வழங்க முன்வந்ததாகவும் எனினும் இருவரும் ரணில் விக்கிரமசிங்க மீதான அச்சம் காரணமாக அதனை ஏற்க மறுத்தனர் என குறிப்பிட்டிருந்தார்.

2 comments:

  1. மஹிந்த பிரதமர் பதவியை கேட்டுப்போனார், ஆனால் உங்களிடம் அது கேட்டு வந்தது. மக்கள் நலன் கருதி வாங்கியிருக்கலாம். இப்போ குரங்கிடம் கொடுத்துவிட்டு அவதிப்படுகிறோம்.

    ReplyDelete
  2. மிஸ்டர் சஜித், பொத்திக்கொண்டு போறீங்களா எங்கட வாயைக் கிளறாமால்?

    தேடி வந்தும் சும்மா இருந்தாராம்...
    நாட்டுக்கு நல்லது செய்ய வக்கற்ற உங்களைப் போன்றவர்களால் தான் ரணில் போன்றவர்கள் இன்னுமும் பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.
    இனிமேல் நீங்கள் பதவிக்கு வர நினைக்கும் பொழுது உங்களுக்கு 77 வயது கடந்து கிழவன் ஆகி இருப்பீர்கள், யாருக்கு என்ன பயன்? இன்னொரு ரணில் தான் நீங்களும், அப்பொழுது.

    ReplyDelete

Powered by Blogger.