Header Ads



கண்ணீர் விட்டழுத சிறிசேன


சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்ணீர் விட்டழுததாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பில் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இன்று -25- நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி அழுதுள்ளார்.

உள்ளுராட்சி தேர்தலில் தோல்வியடைந்தவேளை ரணில் விக்கிரமசிங்கவை பதவிவிலகுமாறு எவ்வாறு மன்றாடினேன் என விபரிக்கும் போது ஜனாதிபதி கண்ணீர் சிந்தியுள்ளார்.

ரணிலின் பொருளாதார கொள்கைகள் காரணமாகவே நாங்கள் தேர்தலில் தோற்றோம் என அவரிற்கு தெரிவித்தேன், இந்த அறையில் வைத்து அவரை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டேன் அவர் அதனை ஏற்க மறுத்தார் என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் 100 தடவைக்களிற்கு மேல் வெளிப்படையாக மோதியிருப்போம் எங்கள் மத்தியிலான அதிகாரப்போட்டி குறித்து அமைச்சரவை வெளிப்படையாக அறிந்திருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமராக நியமிக்கப்பட்டவர் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவேண்டும் என்ற பாரம்பரியமுள்ளது. என்னால் ரணிலுடன் இணைந்து பணியாற்ற முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. So you only fiund MR after that? You were in the same position with MR as what you say on Ranl.

    If yiu could have openly brought no confidence motion on Ranl and could have Removed him... but went back to MR has no justification at all.

    ReplyDelete
  2. You have been criticizing Mahinda for last 3 years more than UNPers. What is your justification to select Mahinda as a PM. All lies and power hungry.

    ReplyDelete
  3. மூன்று வருடங்களுக்கு முன்பு கூறிய அந்த ஆறடி குழிக்குள் தள்ளி அத்துடன் மண்ணைமூடிவிட்டால் உலக அரங்கில் இந்த நாட்டு மக்களை இந்த புண்ணாக்கு படுத்தியுள்ள அவமானம், வெட்கம், கேவலத்துக்கு ஓரளவு தற்காலிக மனநிம்மதியாவது கிடைக்கும்.

    ReplyDelete
  4. ரணில் மத்திய வங்கி கொள்ளை இட்டதற்காக , ஆட்சியை பறித்து அதை விட கூடுதலாக கொள்ளை அடித்த கும்பலுக்கு ஆட்சியை .கொடுத்து நாட்டை குட்டி சுவராக் கும் . முயற்சி இதற்காகவா நாங்கள் ஜனாதிபதிக்கு ஓட்டு போட்டது

    ReplyDelete
  5. You always could have been a batter grama sevakar( gamarala)

    ReplyDelete
  6. President Mr. Babahukum..... Latest Crocodile Tears.

    Why you did not arrest Ranil the Bank Thief?
    Why you did not arrest Rajapaksa Criminal & Thief?
    Why you make M Rajapaksa the PM?
    Can you Justify Mr. Sorisayna?

    ReplyDelete

Powered by Blogger.