Header Ads



இப்படிச் செய்தால், எனது தந்தை பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வார் - நாமல்

"சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் கிடையாது" என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையிலேயே நாமல்  மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு,

“கடந்த மூன்றரை ஆண்டுகளாக சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்வாறான பக்கசார்பான செயற்பாடுகளேயே செய்து வருகிறார்.

நிலையியற் கட்டளைகளை மீறி அரசியலமைப்பிற்கு எதிராக ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாகவும் அவரது செயற்பாடுகள் காணப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு 113 பலம் இருப்பதை நிரூபித்து காட்ட முடியும் என்றால் ஆவணம் ஒன்றை கையொப்பமிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க வேண்டும்.

அவ்வாறான நிலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்வார். மாறாக இவ்வாறான காரியங்களில் ஈடுபட கூடாது.

இன்றைய பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது அதிகாரங்களை பயன்படுத்தியுள்ளார். ஆனால் சபாநாயகருக்கு நிறைவேற்று அதிகாரங்கள் கிடையாது.

அதனால் சபாநாயகரின் செயற்பாடுகளில் எமக்கு நம்பிக்கை இல்லை அவரின் செயற்பாடுகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்தார்.

1 comment:

  1. வாப்பாவையும் மகனையும் முதலில் பைத்தியகார வைத்தியசாலையில் பத்து வருசம் சிகிச்சை செய்து 15 வருடம் மனநோய் புணர்வாழ்வு முகாமில் பயிற்சி கொடுத்து மீண்டும் பரிசீலனை செய்து தான் விடுதலை செய்ய வேண்டும். பாராளுமன்றத்தின் சாதாரண பிரஜைகளுக்குத் தெரிந்த அமர்வு, நடைமுறைச் சட்டங்கள் அதன் செயற்பாடுகள் எதுவும் தெரியாத முட்டாள் சாணங்களையும் இந்த நாட்டு மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பினால் மக்களின் நிலைமை இதுதான். மறுபக்கத்தில் மாலையில் கசிப்பு குடித்து ஆடுபவன் போல் அவர் வேண்டாம் இவர்தான் தேவை என அடம்பிடிக்க இவன் என்ன தன் பெற்றோரின் சொந்த சொத்துகளாக நாட்டின் சட்டங்களையும் நாட்டுச் சொத்துக்களையும் கையாளும் நபருக்குப் பதவி சனாதிபதி!

    ReplyDelete

Powered by Blogger.