Header Ads



அரபு நாடு­க­ளு­ட­னான முரண்­பா­டுகள் தொடர்பில் கவ­லை­ய­டை­கிறேன், எனினும் பொரு­ளா­தாரம் முன்­னேறியுள்ளது - கட்டார் அமீர்

ஏனைய அரபு நாடு­க­ளு­ட­னான முரண்­பா­டுகள் தொடர்­வது தொடர்பில் கவ­லை­ய­டை­வ­தாக தெரி­வித்­துள்ள கட்டார் அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாட் அல்­தானி, எனினும் அந்த நெருக்­க­டிகள் கடந்து போகும். கடந்த வருடம் எமது நாட்டின் பொரு­ளா­தாரம் முன்­னேற்றம் அடைந்­துள்­ளது எனத் தெரி­வித்தார்.

உலகின் முத­லா­வது திரவ இயற்கை எரி­வாயு உற்­பத்தி நாடு என்ற பெயரைத் தக்க வைப்­ப­தற்­காக தமது நாடு தொடர்ந்து எண்ணெய் மற்றும் எரி­வாயுக் கைத்­தொ­ழிலை விருத்தி செய்யும் எனவும் அரபு நாடு­களின் ஷூறா சபைக் கூட்­டத்தில் தமீம் தெரி­வித்தார்.

கட்­டாரின் ஏற்­று­ம­திகள் கடந்த வருடம் 18 வீதத்­தினால் அதி­க­ரித்­த­தா­கவும் செல­வுகள் 20 வீதத்­தினால் குறை­வ­டைந்­த­தா­கவும் தமீம் மேலும் தெரி­வித்தார்.

டோஹா பயங்­க­ர­வா­தத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தா­கவும் வளை­குடா ஒத்­து­ழைப்பு நாடு­களின் அங்­கத்­த­வர்­க­ளுடன் 2014 ஆம் ஆண்டு செய்­து­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கை­யினை மீறி­ய­தா­கவும் குற்­றம்­சாட்டி கடந்த 2017 ஜூன் மாதம் 05 ஆந் திகதி சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு அமீ­ரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தமது கட்­டா­ரு­ட­னான இரா­ஜ­தந்­திர மற்றும் வர்த்­தகத் தொடர்­பு­களை தரை, வான் மற்றும் கடல் மார்க்­கங்­களை தடை செய்­ததன் மூலம் துண்­டித்­தன.

எனினும் கட்டார் இந் நான்கு நாடு­க­ளி­னதும் குற்­றச்­சாட்­டுக்­களை மறுத்து வரு­கி­றது. பிளவு ஆரம்­பித்­தது தொடக்கம் கட்டார் நாண­யத்தின் பெறு­மதி பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றது என்­ப­தோடு அண்டை நாடு­க­ளினால் விதிக்­கப்­பட்ட தடை­களின் தாக்­கத்­தி­லி­ருந்து மீள்­வ­தற்கு பொரு­ளா­தாரம் விரி­வு­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் தமீம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஆற்­றிய உரையில் தெரி­வித்தார்.

வளை­குடா ஒத்­து­ழைப்பு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான முரண்பாடுகள் தொடர்பில் பேசிய தமீம் வளைகுடா நாடுகளை பலவீனப்படுத்துவது பிராந்தியப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எமது   பலவீனப்படுத்தும் எனத் தெரிவித்தார்.
-Vidivelli

No comments

Powered by Blogger.