Header Ads



ஐ.தே.க. க்கு ஆதரவு அளிப்பது, அவர்களுடன் இணைந்து கொள்வதாக அர்த்தமில்லை – சுமந்திரன்

நாட்டில் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு அளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்ததை வைத்து, அவர்களுடன் இணைந்து கொள்வதாக அர்த்தம் கொள்ளக் கூடாது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்க ஆதரவு அளித்து, கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய கடிதம் தொடர்பாக விளக்கமளித்தார்.

நாட்டின் உறுதிப்பாடு கருதி, ஒக்ரோபர் 26ஆம் நாளுக்கு முன்பிருந்த அரசாங்கத்தை மீளமைப்பதற்கு அல்லது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் கொண்ட ஐதேமுவைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பதற்கு, ஆதரவு வழங்குவதாக நாம் எமது கடிதத்தில் தெளிவாக கூறியிருக்கிறோம்.

இது, நாங்கள் அவர்களுடன் இணைந்து கொள்வதாக அர்த்தமாகாது.

அரசியல் அமைப்பினை பாதுகாத்தால் மட்டுமே தமிழ் மக்களின் அரசியல் தீர்வுளை பெற்றுக்கொள்ள முடியும்.

தான்தோன்றித்தனமாக அரசியல் அமைப்பினை கையாளக்கூடாது என்பதற்காகவே நாமும் இணைந்து ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்கின்றோம்.” என்றும் தெரிவித்தார்.

1 comment:

  1. இன்னுமுமா இந்த தமிழ்ச் சனம் இவரையெல்லாம் நம்புது?
    மகிந்தவை விட டேஞ்சரான ஆளுய்யா இவரு.

    ReplyDelete

Powered by Blogger.