Header Ads



சிறுபான்மை சமூகங்களின், பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்

நாட்டில் அர­சியல் குழப்ப நிலை தோற்­றம்­பெற்று ஒரு மாத கால­மா­கின்ற நிலையில், அதனைத் தீர்ப்­ப­தற்­கான ஆரோக்­கி­ய­மான நகர்­வுகள் எத­னையும் காண முடி­ய­வில்லை. இந்த சர்ச்­சைக்கு முற்­றுப்­புள்ளி வைப்­பது தொடர்பில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை, மைத்­திரி- மஹிந்த - ரணில் தரப்பு பங்­கேற்ற பேச்­சு­வார்த்­தை­யிலும் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை.
கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற விரும்­பத்­த­காத சம்­ப­வங்கள் நாட்­டுக்கு சர்­வ­தேச ரீதி­யாக அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் இன்­றைய தினம் பாரா­ளு­மன்றம் மீண்டும் கூடு­கி­றது.எனினும் இன்­றைய தினமும் பாரா­ளு­மன்ற அமர்­வு­க­ளுக்கு இடை­யூ­றுகள் விளை­விக்­கப்­படக் கூடிய சாத்­தியக் கூறு­களே அதிகம் தென்­ப­டு­கின்­றன.
எது எப்­ப­டி­யி­ருப்­பினும் நெருக்­க­டி­யான இந்த அர­சியல் சூழ்­நி­லையில் சிறு­பான்மைக் கட்­சிகள் கொழும்­பி­லுள்ள வெளி­நாட்டுத் தூது­வர்­க­ளுடன் சந்­திப்­பு­களை நடத்தி தத்­த­மது சமூ­கங்­களின் பாது­காப்பு தொடர்­பிலும் தமது நிலைப்­பா­டுகள் தொடர்­பிலும் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளன.
கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வெளி­நாட்டுத் தூது­வர்­களைச் சந்­தித்த தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, இந்த அர­சியல் நெருக்­கடி தொட­ரு­மாயின் சிறு­பான்மை சமூ­கத்­தி­னரே அதிக பாதிப்­பு­களை எதிர்­கொள்ளக் கூடும் என சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர்.
'' நாட்டில் தற்­போது பிர­த­மரும் இல்லை.  அர­சாங்­கமும் இல்லை. அரச இயந்­திரம் சீர்­கு­லைந்­துள்­ளது. இந் நிலை தொடர இட­ம­ளிக்க முடி­யாது. இந் நிலை தொடர்ந்தால் சட்­டமும் ஒழுங்கும் சீர்­கு­லையும்.  சமூக விரோத சக்­திகள் வன்­மு­றை­களில் ஈடு­ப­டலாம். அவ்­வா­றான சூழ்­நிலை ஏற்­பட்டால் சிறு­பான்மை மக்­களே அதிகம் பாதிக்­கப்­ப­டு­வார்கள்'' என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் வெளி­நாட்டுத் தூது­வர்­க­ளிடம் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.
உண்­மையில் சம்­பந்தன் ஐயாவின் இந்தக் கருத்து ஊன்றிக் கவ­னிக்­கத்­தக்­க­தாகும். இந்த நாட்டில் ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­ச­ரவை அனைத்தும் சீராக இயங்­கும்­போதே அளுத்­கம, கிந்­தோட்டை, அம்­பாறை, கண்டி வன்­மு­றைகள் தோற்றம் பெற்­றன. அதனை யாராலும் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை. இன்று பிர­த­மரோ அமைச்­ச­ர­வையோ இல்­லாத நிலையில், நிய­மிக்­கப்­பட்ட அமைச்­சர்கள் கூட சட்­ட­வி­ரோ­த­மா­ன­வர்கள் என்று கூறப்­ப­டு­கின்ற நிலையில் ஏதே­னு­மொரு கல­வரம் வெடித்தால், சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக இன­வாத சக்­திகள் வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்த்­து­விட்டால் அது மிகப் பார­தூ­ர­மான விளை­வு­க­ளையே ஏற்­ப­டுத்தும் என்­பதில் எந்­த­வித சந்­தே­கமும் இல்லை.
அதே­போன்­றுதான் நேற்­றைய தினம் கொழும்­பி­லுள்ள முஸ்லிம் நாடு­களின் தூது­வர்­களைச் சந்­தித்த முஸ்லிம் கட்­சி­களின் பிர­தி­நி­திகள், தற்­போ­தைய அர­சியல் குழப்ப நிலை தொடர்பில் விளக்­க­ம­ளித்­துள்­ளனர். இதன்­போது முஸ்லிம் எம்.பி.க்கள் ஒற்­று­மை­யுடன் செயற்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்ள தூது­வர்கள், முஸ்லிம் சமூ­கத்­திற்கு எந்­த­வித பாதிப்பும் ஏற்­பட இட­ம­ளிக்க முடி­யாது என்றும் அது தொடர்பில் தாம் சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­களை வலி­யு­றுத்­துவோம் என்றும் தெரி­வித்­துள்­ளனர்.
எது எப்­ப­டி­யி­ருப்­பினும் இந்த அர­சியல் குழப்ப நிலை மேலும் மேலும் தொடர இட­ம­ளிப்­ப­தா­னது நாட்டைக் குட்­டிச்­சு­வ­ராக்­கவே வழி­வ­குக்கும். டொலரின் விலை அதி­ப­ரிப்பு, வெளி­நாட்டுக் கடனைச் செலுத்த முடி­யாத நிலை, சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கையில் வீழ்ச்சி, பொரு­ளா­தார வீழ்ச்சி என நாடு அத­ல­பா­தா­ளத்தில் சென்று கொண்­டி­ருக்­கையில் வன்­மு­றை­களோ அமைதியின்மையோ ஏற்படுமாயின் அது இன்னுமொரு உள்நாட்டுச் சண்டைக்கே வித்திடும் என்ற அச்சத்தையும் புறந்தள்ளிவிட முடியாது.
எனவேதான் மைத்திரி, மஹிந்த, ரணில் தரப்பு இந்த விடயத்தில் தமது தனிப்பட்ட கட்சி, அரசியல் நலன்களையும் விருப்பு வெறுப்புகளையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு அவசர அவசரமாக  நாட்டைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli

1 comment:

  1. உறுதிப்படுத்த வேண்டியவர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். அல்லாஹ் ஒருவன் தான் எங்களை பாதுகாக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.