Header Ads



அலரி மாளிகையின் செலவுகளை ஐ.தே.க. பொறுப்பேற்பு - அநுரகுமாரவின் உரைக்கு உடனடி பதில்

அலரி மாளிகையின் செலவுகள் (மின்சாரம், நீர், இதர செலவுகள்), ஐ.தே.கவினராலேயே செலவிடப்படுவதாகவும், இதற்கு, பொதுமக்களின் பணம் பயன்படுத்தப்படுவதில்லை எனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் கூறினார்.

மக்களது வரிப்பணத்திலேயே, அலரி மாளிகையில் நிலைகொண்டுள்ள ஐ.தே.கவினர், அங்கு இடம்பெறும் நிகழ்வுகளுக்கான செலவுகளைச் செய்கின்றனரென, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே, கிரியெல்ல எம்.பி, மேற்கண்டவாறு கூறினார். 

2

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவால் கொண்டுவரப்பட்டுள்ள இடைக்காலக் கணக்கறிக்கைக்கு எதிராக, ஐக்கிய தேசிய முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள யோசனை குறித்து சபையில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவல் அநுரகுமார திசாநாயக்க, இந்த யோசனையை நிறைவேற்றிக்கொண்ட பின்னர், அலரி மாளிகையிலிருந்து, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் வெளியேற வேண்டுமென்றார்.

காரணம், அங்கு அவர்கள் செய்யும் செலவுகளையும், பொதுமக்களின் வரிப் பணத்தைக் கொண்டே செலுத்த வேண்டியுள்ளதாகக் கூறிய அவர், மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கோ, பிரதமருக்கான வரப்பிரசாதங்கள் கிடையாதெனவும் கூறினார்.

No comments

Powered by Blogger.