Header Ads



இலங்கை அரச ஹஜ்­ குழு, தனது கட­மை­களை இடை நிறுத்தியது

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அதி­ரடி தீர்­மா­னங்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்­கென புதி­தாக இரா­ஜாங்க அமைச்சர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பதால் புதிய இரா­ஜாங்க அமைச்­சரின் உத்­த­ர­வுகள் கிடைக்கும் வரை இது­வரை காலம் இயங்கி வந்த அரச ஹஜ்­குழு தனது கட­மை­களை இடை நிறுத்தி வைத்­துள்­ள­தாக குழுவின் தலைவர் கலா­நிதி. எம்.ரி.சியாத் தெரி­வித்தார்.

புதி­ய­மாற்­றங்­க­ளி­னை­ய­டுத்து அரச ஹஜ்­குழு தொடர்ந்தும் செயற்­ப­டுமா இல்­லையேல் புதிய குழு­வொன்று நிய­மிக்­கப்­ப­டுமா என்­பது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், 

‘தற்­போது நிலவும் அர­சியல் தலம்பல் நிலை­மைக்கு எதிர்­வரும் 14 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கூடி­யதன் பின்பே தீர்­வு­கி­டைக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது’. இந் நிலையில் முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்­காக புதி­தாக நிய­மனம் பெற்­றுள்ள இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி­யி­ட­மி­ருந்தும் இது­வரை எது­வித உத்­த­ர­வு­களும் கிடைக்கப் பெற­வில்லை. ஹஜ் ஏற்­பா­டுக்­கென ஹஜ் சட்டம் ஒன்­றினை பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரித்துக் கொள்­வ­தற்­காக சட்ட வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டு வந்தது. அதன் பணிகளும் தற்போது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றார்.

-Vidivelli

1 comment:

  1. Fauzi is waiting from MY3 % MR....as they r looking to increase the rates and to make double allcountry fees to go to Gulf

    ReplyDelete

Powered by Blogger.