November 05, 2018

முஸ்லிம் கட்சிகளின், தயவில் பாராளுமன்றம்

பிர­தான கட்­சிகள் இரண்டும் பாரா­ளு­மன்­றத்தில் தமது பெரும்­பான்­மையை நிரூ­பிக்கும் வகையில் பகீ­ரதப் பிர­யத்­த­னங்­களில் ஈடுட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. இவை­யி­ரண்டும் இப்­போது சிறு­பான்மைக் கட்­சி­களின் தயவை நாடி­யி­ருக்­கின்ற அதே­வேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய இரு முஸ்லிம் கட்­சி­களும் தாம் எத்­த­ரப்பை ஆத­ரிக்­கப்­போ­கிறோம் என்ற நிலைப்­பாட்­டுக்கு இது வரையும் வர­வில்லை என்றே தெரி­ய­வ­ரு­கி­றது.

16 பிர­தி­நி­தி­களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஜன­நா­ய­கத்­திற்கு விரோ­த­மாக மஹிந்த பிர­த­ம­ராக்­கப்­பட்­டுள்­ள­மையால் தாம் மஹிந்­தவை ஆத­ரிக்கப் போவ­தில்லை என்ற கருத்தை வெளி­யிட்­டுள்­ளது.

முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஐ.தே. முன்­ன­ணி­யுடன் இணைந்து போட்­டி­யிட்­டதில் 6 உறுப்­பி­னர்­க­ளையும் தம் கட்சி சின்­னத்தில் போட்­டி­யிட்டு பெற்ற ஓர் உறுப்­பி­ன­ருடன் மொத்தம் 7 உறுப்­பி­னர்­களைத் தம்­வசம் வைத்­துள்­ளது.

இதே­போன்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுத்தீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐ.தே. முன்­ன­ணியில் இணைந்து போட்­டி­யிட்­டதன் மூலம் 5 உறுப்­பி­னர்­களைப் பெற்­றி­ருந்­தது.

இவ்­விரு கட்­சி­க­ளிலும் உள்ள 12 பிர­தி­நி­தி­க­ளி­னதும் ஆத­ரவைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும், ஐக்­கிய தேசியக் கட்­சியும் முஸ்லிம் கட்சித் தலை­வர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதி­யுதீன்  ஆகிய இரு­வ­ரு­டனும் பல சுற்­றுப்­பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டு வந்­துள்­ளன.

ஐ.ம.சு முன்­னணி சார்­பாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ  தலை­மை­யி­லான முக்­கி­யஸ்­தர்கள் அடங்­கிய குழு­வினர் தம்­பக்­கம் ஈர்ப்­ப­தற்­கான கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்டு வரு­வ­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது.

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதா என்ற இக்கட்டில் இரு கட்சிகளும் உள்ளன. மேற்­படி இரு முஸ்லிம் கட்­சி­க­ளுடன்  இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் போதும் இவர்கள் மஹிந்த ராஜபக் ஷவை ஆத­ரிக்கும் பட்­சத்தில் இரு கட்­சி­க­ளுக்கும் தலா கபினட் அமைச்­சுக்கள் இரண்டும் பிரதி அமைச்­சுக்கள் பல­வற்­றையும் வழங்கத் தயா­ராக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இது விட­ய­மாக சிங்­கள ஊட­க­மொன்று ஸ்ரீல.மு காங்­கிரஸ் செய­லாளர் நிஸாம்  காரி­யப்­ப­ருடன் வின­வி­ய­போது தமது கட்சி இது­வரை எந்தத் தீர்­மா­னத்­திற்கும் வர­வில்லை என்றே அவர் கருத்துத் தெரி­வித்­துள்ளார். மஹிந்­தவை ஆத­ரிக்கப் போகி­றீர்­களா? என்று மீண்டும் கேள்வி எழுப்­பப்­பட்ட போதும் தாம் அத்­த­கைய முடி­வெ­துவும் எடுக்­க­வில்லை என்றே அவர் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

இதே­நேரம் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் பிர­தி­நி­தி­யொ­ருவர் தனிப்­பட்ட ரீதியில் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் மஹிந்­த­ரா­ஜபக் ஷவைச் சந்­தித்து தனது ஆத­ரவைத் தெரி­வித்­துள்­ள­போதும், அதுவும் முழுக்­கட்­சி­யையும் தவிர்த்து தனி நபர் என்ற அடிப்­ப­டையில் அவ­ரது ஆத­ரவும் ஏற்­கப்­ப­ட­வில்லை என்றும் தெரி­ய­வருகிறது.

கடந்த பொதுத்­தேர்­தலில் ஐ.தே. முன்­ன­ணிக்கு106 ஆச­னங்­களும் ஐ.ம.சு. முன்­ன­ணிக்கு ஈ.பி.டீ.பி. ஓர் உறுப்­பி­ன­ருடன் 96  ஆச­னங்­களும் கிடைக்கப் பெற்­றுள்­ளன.

தற்­போ­துள்ள சூழ்­நி­லையில் ஐ.தே. முன்­ன­ணியைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்திக் கொண்­டி­ருந்த விஜ­ய­தாஸ ராஜபக் ஷ, வஸந்த சேனா­நா­யக்க, ஆனந்த அளுத்­க­மகே, துனேஷ் கங்­கந்த, வடிவேல் சுரேஷ், எஸ்.பீ. நாவின்ன, எஸ். வியா­ழேந்­திரன் ஆகிய 7 உறுப்­பி­னர்­களும் அமைச்சுச் சலு­கை­க­ளைப்­பெற்று மஹிந்த பக்கம் தாவி­யுள்­ளனர். இந்­நி­லையில் தற்­போ­தைய ஆளுந்­த­ரப்பு 103 உறுப்­பி­னர்­க­ளாக உயர்ந்­துள்­ளது . மேலும் ஐக்­கிய தேசிய கட்­சியால் நிய­மனம் பெற்ற அது­ர­லியே ரத்ன தேரரும் மஹிந்த கூட்­ட­ணியை ஆத­ரிக்­கப்­போ­வ­தாக தெரி­வித்­துள்ள நிலையில் மஹிந்­த­வுக்கு 104 உறுப்­பி­னர்கள் உள்­ளனர். இன்னும் 9 பேரே தேவைப்­ப­டு­கின்­றனர். ஜனா­தி­ப­தியின் ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ரான முடிவு என்ற கார­ணியை முன்­வைத்து மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் 6 பிர­தி­நி­தி­களும் தமிழர் கூட்­ட­ணியின் 15 தற்போதுள்ள பிர­தி­நி­தி­களும் மஹிந்­தவை ஆத­ரிக்­காத நிலையில் இரு முஸ்லிம் கட்­சி­களின் தய­வையே மஹிந்த தரப்பு எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. இன்று எழுந்துள்ள சிக்கல் நிலையில் ஜனநாயக குளறுபடிக்கு பதிலடி கொடுக்க தமிழர் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன பயணிக்கும் பாதையில் முஸ்லிம் கட்சிகளும் பின்பற்றவே செய்யும் என்றும் பெரும்பாலான நடுநிலை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

எனவே பட்டம், பதவி, சலுகைகளை உதறித்தள்ளிவிட்டு இஸ்லாமிய விழுமியத்தையும் ஜனநாயகப் பாராளுமன்றத்தையும் பாதுகாக்க முஸ்லிம் கட்சிகள் கைகோர்க்கும் என்பதை அடுத்து வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
-Vidivelli

4 கருத்துரைகள்:

ரவூப் ஹகீம்,ரிசாத் அவர்களே நீங்கள் முஸ்லிம் மக்களுக்கு அமைச்சரவைகள் மூலம் எந்த உதவயும் செய்யத்தேவையில்லை ஜன்னாயகத்தை புதைத்துவிட்டு நாட்டின் சட்டத்தை புரம்தள்ளிவிட்டு நாட்டை நாசமாக்கும் முறையில் பகிரங்கமாக இலஞ்சம் கொடுத்து பிரதமராக முயற்சிக்கும் மஹிந்தவிற்கு இந்த நிலைமையில் உதவ வேண்டாம் இப்படி ஒரு தீங்கை நீங்கள் செய்தால் நாட்டுக்கு தீங்கு செய்த (தம்பிலா) என்று பெரபான்மை மக்கள் உங்களையும் இலங்கை முஸ்லிம்கறையும் மருமை வரை திட்டி தீர்து வரலாறு எழுதுவார்கள்

ரனில்,மைதிரி,
,மஹிந்த,எல்லாறும் ஒன்றுதான் யாரும் நாட்டுமக்களின் பிரச்சினைகளை கவனம் எடுப்பதில்லை ஆகையால் அனைவரும் மக்களின் சொத்துக்களை களவெடுப்பதில் போட்டிபோட்டு கொண்டிருக்கின்றார்கள் ஆகையால் எவனாக இருந்தாலும் சட்டத்திட்கு மாறுசெய்பவனை ஆதரிக்காதிர் அதொயாவது உங்களால் தைரியமாக செய்யமுடியும் என்று நம்புகின்றோம்,பாராலுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்தினாலும் முஸ்லிம்களின் பங்களிப்பை பெரும்பான்மை கட்சிகள் கேட்பார்கள் அப்போது மக்களின் தேவைகளை முன்வைத்து பேரம் பேசவும்

Riyal you areselfish talking

Post a Comment